ஸ்டம்புகளுக்குப் பின்னால் ஒரு மனிதர் இருக்கிறார் அவர் தான் … ! தோல்விக்கு பின் ஹர்திக் பேசியது என்ன ?

ஐபிஎல் 2024 : நேற்று நடைபெற்ற சென்னை அணியுடனான போட்டியில் தோல்வியடைந்ததை குறித்து மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா போட்டி முடிந்த பிறகு பேசி இருந்தார்.

ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உடையே நேற்றைய போட்டியில் சென்னை அணியும், மும்பை அணியும் நேற்று இரவு மோதியது. இந்த போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் 4 விக்கெட் இழந்து 206 ரன்கள் எடுத்தது. ருதுராஜ், துபே இருவரின் அரை சதத்தில் சென்னை அணி 170 ரன்களுக்கு மேல் எடுத்தது. இறுதியில் தோனியின் 4 பந்துக்கு 20 ரன்கள் என்ற ருத்ர தாண்டவத்தால் 200 ரன்களை கடந்தது சென்னை அணி.

அதன் பிறகு களமிறங்கிய மும்பை அணி பவர் ப்ளேவில் மட்டும் ஆதிக்கம் செலுத்தினர். இதனால் 6 ஓவருக்கு 60 ரன்களை கடந்தது மும்பை அணி. அதன் பிறகு பத்திரனாவின் ஆக்ரோஷ பந்து வீச்சால் மும்பை அணி முக்கிய விக்கெட்டுகளையும் இழந்து, ரன் எடுக்க முடியாமலும் திணறியது. தனி ஆளாக நின்று சதம் விளாசிய ரோஹித்தின் விளையாட்டும் மும்பை அணிக்கு கைகொடுக்காமல் போனது. இதனால் 20 ஓவருக்கு வெறும் 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி மும்பை அணியை வீழ்த்தியது.

போட்டி முடிவடைந்த பிறகு மும்பை அணியின் கேப்டன் ஆன ஹர்திக் பாண்டியா தோல்வியின் காரணத்தை பற்றி பேசி இருந்தார். அவர் பேசுகையில், “சென்னை அணி நிர்ணயித்த இலக்கு நிச்சயமாக எங்களால் எட்டக்கூடிய ஒன்றாக தான் இருந்தது. ஆனால் அவர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். அதிலும் பத்திரனாவின் ஓவர்கள் எங்களுக்கு கடினமாக  அமைந்தது என்று நான் உணர்கிறேன். அவர்கள் அவர்களது திட்டங்களிலும் அணுகு முறையிலும் புத்திசாலியாக இருந்தார்கள்.

முக்கியமாக ஸ்டம்புகளுக்குப் பின்னால் ஒரு மனிதர் இருக்கிறார், அவர் அணியின் பவுலர்களை என்ன செய்யவேண்டும் என்று சொல்லிக்கொண்டே அடிக்கடி சொல்லி கொண்டே இருந்தார். அது அவர்களுக்கு மிகவும் உதவியது. பத்திரனா வருவதற்கு முன் விக்கெட்டுகளை இழக்காமல் கைப்பற்றும் வரை நாங்கள் நன்றாக பேட்டிங் செய்து ரன் சேசிங்கில் நன்றாகவே இருந்தோம். அவர் தான் இந்த போட்டியில் திருப்பு முனையாக அமைந்தார்”, என்று நேற்று நடைபெற்ற போட்டியின் தோல்வியின் காரணத்தை பற்றி ஹர்திக் பாண்டியா பேசி இருந்தார்.