லட்சத்தீவு எம்பி தகுதிநீக்கம் ரத்து.! நீதிமன்ற தீர்ப்பை அடுத்து மக்களவை செயலர் அறிவிப்பு.!

லட்சத்தீவு எம்பி முகமது ஃபைசல்வுக்கு வழங்க பட்ட தண்டனை கேரள  நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அவரது எம்பி பதவி தகுதிநீக்கமும் நீக்கப்பட்டது.  

தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லட்சத்தீவு எம்பி முகமது ஃ பைசல் மீது கொலைமுயற்சி , கொலை மிரட்டல் புகார் எழுந்தது. இந்த புகாரை அடுத்து, அவருக்கு லட்சதீவு கவரத்தி நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து.

தகுதிநீக்கம் :

இதனை அடுத்து, அவர் ராகுல்காந்தியை போலவே , முன்னதாக மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனை அடுத்து, கவரத்தி நீதிமன்ற தீராப்பை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் முகமது பைசல் மேல்முறையீடு செய்து இருந்தார்.

தகுதிநீக்கம் ரத்து :

இந்த மேல்முறையீடு வழக்கில், முகமது பைசல் மீதான தண்டனை ரத்து செய்யப்பட்டது. கேரள நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, அவர் மீதான தகுதிநீக்க நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது என மக்களவை செயலர் அறிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் மனு :

இந்த அறிவிப்புக்கு முன்னரே தனது தகுதிநீக்க நடவடிக்கையை எதிர்த்து முகமது பைசல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

Leave a Comment