ஆட்டுக்குத் தாடியும், மாநிலத்துக்கு ஆளுனர் பதவியும் தேவையில்லாதவை – ராமதாஸ்

ஆட்டுக்குத் தாடியும், மாநிலத்துக்கு ஆளுனர் பதவியும் தேவையில்லாதவை.

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற, அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என, தமிழக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதித்து வருகிறார்.

ஆளுநரின் இந்த செயலை கண்டித்து, அரசியல் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாமக நிறுவனர் டாக்.ராமதாஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘7.5 சதவீதம் இடஒதுக்கீடு சட்டம் குறித்து, தொடர் அழுத்தங்கள் கொடுத்தும் ஆளுநர் இன்னும் கையெழுத்திடவில்லை. ஆட்டுக்குத் தாடியும், மாநிலத்துக்கு ஆளுனர் பதவியும் தேவையில்லாதவை என்ற அண்ணாவின் வார்த்தைகள், மிகவும் சரியானவை என்பதை இது உறுதி செய்கிறது.

7.5% இட ஒதுக்கீடு சட்டத்திற்கு தமிழக ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்காதது ஏன்? இதற்கான இளைஞர்களின் பதிலை நான் எதிர்பார்க்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார். மேலும், தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை அடிப்படையாக கொண்டு, மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவுக்கான அரசணை வெளியிடப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து உங்களை பாதுகாக்கும் பதநீர்..!

பதநீர் - கொளுத்தும் கோடையின் வெப்பத்திலிருந்து நம்மை காக்கும் பதநீரின் குளு குளு நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம். பதநீர் தயாரிக்கும் முறை: பதநீர் பனை மரத்திலிருந்து…

27 mins ago

வெயிலில் மயங்கிய சிறுவர்கள்.. தோல்வியில் உலக சாதனை நடன நிகழ்ச்சி.. வருந்திய பிரபு தேவா.!

Prabhu Deva Performance: உச்சி வெயிலில் காத்து கிடந்தும் கடைசி நிமிடத்தில் வராத பிரபுதேவா வருத்தம் தெரிவித்து வீடியோ கால் செய்த வளம். சர்வதேச நடனத் தினத்தை…

56 mins ago

கில்லியை மிஞ்சியதா தீனா? ரீ-ரிலீஸில் செய்த வசூல் விவரம் இதோ!

Dheena Re Release : ரீ -ரிலீஸ் ஆன தீனா படம் இதற்கு முன்பு வெளியான கில்லி படத்தின் முதல் நாள் வசூலா முறியடித்துள்ளதா என்பதை பார்க்கலாம்.…

1 hour ago

‘ஏமாற்றம் தான் மிச்சம்’ – மனம் உடைந்த ரிங்கு சிங் குடும்பத்தினர்..!

Rinku Singh : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் முதன்மை அணியில் இடம்பெறாமல், ரிசர்வ் வீரராக தேர்வு…

1 hour ago

ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளே… இன்று மாலை முக்கிய அப்டேட்.!

EPass : ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளுக்கு பிரத்யேக இ பாஸ் வழங்க இன்று வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கோடைகாலம் ஆரம்பித்து வெயில் மக்களை வாட்டி வதைத்து…

1 hour ago

விருதுநகர் வெடிவிபத்து – FIRஇல் வெளியான திடுக்கிடும் தகவல்கள்.!

Virudhunagar : வெடிமருந்து வேன்களை அருகருகே வைத்து, வெடிமருந்துகளை இறக்கியதே விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் நடந்த வெடிவிபத்தில் 3…

2 hours ago