ரஜினியின் 169 திரைப்படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளதாக தகவல்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. இதற்கிடையில், ரஜினிக்கு சிறுநீரக பிரச்சினை இருந்ததால் அவர் அமெரிக்காவிற்கு சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். சிகிச்சையை தொடர்ந்து அவ்வப்போது அமெரிக்கா சென்று உடல்நிலையை பரிசோதித்து வருகிறார்.
அந்தவகையில், கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி அமெரிக்காவிற்கு சென்றார். அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து இன்று ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார்.
இதனையடுத்து தலைவர் 169 திரைப்படத்தை எந்த இயக்குனர் இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மத்தியில் எழுந்துள்ளநிலையில், அதற்கான தகவல் ஒன்று தற்போது கிடைத்துள்ளது. அதாவது, அந்த படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாகவும், இன்னும் சில நாட்களில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
IPL2024: கொல்கத்தா அணி 13.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 8 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல்…
சென்னை: ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான புதிய விதிமுறைகளை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போதயை நடைமுறையின்படி, ஒரு தனிநபர் ஒட்டுநர் உரிமம் பெற வேண்டும்…
சென்னை : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயலாற்ற, இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தற்போது அளித்த பேட்டி ஒன்றில் விருப்பம்…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் படையப்பா படத்தை ரீ-ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமாவில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கின்ற விஷயங்களில் ஒன்று என்னவென்றால் பழைய…
சென்னை : வருகிற ஜூன் மாதம் தொடங்கவுள்ள கோப்பா அமெரிக்கா தொடரிலும் அதற்கு முன் அர்ஜென்டினா அணி விளையாடவுள்ள நட்புரீதியான போட்டிகளிலும் (Friendly Match) லியோனல் மெஸ்ஸி…
குரு பகவான் -குரு பகவானின் அருள் கிடைக்க செய்ய வேண்டியவை என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். இந்து சமய வழிபாட்டில் பல்வேறு வழிபாடுகள் உள்ளது. அதில் நவகிரக…