திருநெல்வேலி: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், நெல்லை மாவட்டத்தில் மிதமான மழை மதியத்திற்கு பிறகு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் இன்று ஒருநாள் (12.12.2024) பள்ளிகள் விடுமுறை விடப்படுகிறது என அம்மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். ஏற்கனவே, 17 மாவட்டங்களில் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, தி.மலை, செங்கல்பட்டு, அரியலூர், சென்னை, […]
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு […]
சென்னை : தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரம் அதாவது 1 மணி வரை 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் […]
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தென்தமிழகத்தில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள ராமநாதபுரம் மற்றும் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், இன்று பள்ளிகள் விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ராமநாதபுரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (நவ.21) விடுமுறை அளிப்பது குறித்து, அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்களே முடிவெடுத்துக் கொள்ளலாம் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். மேலும், மாவட்ட அளவில் பரவலாக கனமழை […]
திருநெல்வேலி : நெல்லை மேலப்பாளையத்தில் பிரதான சாலையில், அமரன் திரைப்படம் வெளியாகியுள்ள அலங்கார் திரையரங்கின் மீது, மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அதாவது, இன்று அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர்கள் சிலரால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேர் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பியோடி விட்டனர். மொத்தம் 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு உள்ளன. இந்நிலையில், இது தொடர்பாக மேலப்பாளையம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த […]
மக்களவை தேர்தலையொட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு தி.மு.க தொடர் பொதுக் கூட்டங்களை நடத்துகிறது. உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்-பாசிசம் வீழட்டும். இந்தியா வெல்லட்டும் என்ற தலைப்பில் மக்களவை தொகுதி வாரியாக மொத்தம் 37 கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதில் திருநெல்வேலியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசுகையில், “ புரியாத மொழிகளில் மத்திய அரசின் திட்டங்கள் உள்ளதோடு மாநில உரிமைகளை பறிக்கும் முயற்சிகளிலும் […]
பெண் உதவி ஆய்வாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருநெல்வேலி சுத்தமல்லி காவல் நிலையத்தில் பெண் காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரியும் மார்க்ரெட் தெரசா என்பவர் பாதுகாப்பு பணியில் இருந்தபோது ஆறுமுகம் என்ற நபர், உதவி ஆய்வாளரைக் கத்தியால் வெட்டியதையடுத்து, அவர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைத் தாக்கிய ஆறுமுகம் என்ற நபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெண் […]
நெல்லை தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலந்து மாசு அடைகின்றது என பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்து வந்தது.இதையடுத்து தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலந்து மாசு அடைவது தொடர்பாக மதுரையில் உள்ள உயர்நீதிமன்ற கிளையில் ராமையன்பட்டியை சேர்ந்த காட்டுராஜா என்பவர் வழக்கு தொடுத்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது மனுதாரர் தரப்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டது.இந்த வழக்கு விசாரணையை அடுத்து தாமிரபரணி ஆற்றில் எங்கெங்கு எல்லாம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார். மேலும் கழிவுநீர் கலப்பது […]
நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் நடைபெற்ற மீனவர்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில், ஏராளமான மீனவர்கள் பங்கேற்று பயனடைந்தனர். தமிழகத்தில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மீனவர்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சி மாதம் தோறும் நடைபெறுவது வழக்கமான நடைமுறையாகும். அதன்படி ராதாபுரத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் அலுவலக கட்டிடத்தின் கூட்ட அரங்கில் மீனவர்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. கூட்டத்தில் இடிந்தகரை, கூத்தங்குழி, பெருமணல், உவரி ஆகிய ஊர்களில் இருந்து ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தூண்டில் வளைவு அமைத்து, கடல் […]
தமிழகத்தில் கேரள மாநில மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழக இயற்கை மற்றும் சுற்றுசூழல் மேம்பாட்டு சங்க துணை தலைவர் சிதம்பரம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கேரள மாநிலத்திலிருந்து கொண்டு வரப்படும் மருத்துவ கழிவுகள் நெல்லை மாவட்டம் புளியங்குடி, சொக்கம்பட்டி கிராமங்களில் கொட்டப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக சுற்றுவட்டாரத்தில் வசிக்க கூடிய மக்களுக்கு […]
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் காதலனை ஏமாற்றி 10 லட்சம் ரூபாய் பறித்த இளம்பெண் கணவருடன் கைது செய்யப்பட்டார். வள்ளியூரை சேர்ந்த உமா என்பவர், நாகர்கோவிலில் இருசக்கர வாகன ஷோரூமில் வேலை பார்த்தபோது, சோதிரி ராஜா என்பவரை 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.இந்நிலையில், இரண்டு மாதத்திற்கு முன்பு, தளபதி சமுத்திரத்தை சேர்ந்த சிவா என்பவரை உமா திருமணம் செய்துள்ளார். இதையடுத்து, உமாவிடம் கொடுத்த ஏடிஎம் கார்டு மற்றும் 13 சவரன் நகையை சோதிரி ராஜா திருப்பி கேட்டுள்ளார்.அவரை உமாவின் […]
நெல்லை அருகே ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 1½ வயது குழந்தை உள்பட 2 பேர் பரிதாபமாக பலியானார்கள். நெல்லை அருகே உள்ள கீழமுன்னீர்பள்ளம் மருதம்நகர் ஈசுவரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்தனசேகர் (வயது 25). இவருடைய மனைவி சிவரஞ்சனி (21). இவர்களுக்கு பாலமுகில் (2½) என்ற மகனும், புகல்யா (1½) என்ற மகளும் உண்டு. இவர்கள் உறவினர் திருமணம் விழாவில் கலந்து கொள்வதற்காக சிவரஞ்சனி தனது குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுடன் ஆட்டோவில் சிங்கிகுளத்திற்கு சென்றார். ஆட்டோவை வனராஜ் […]
நெல்லை மாவட்டம் பாவூர் சத்திரத்தில் பள்ளியை தரம் உயர்த்தும் விழா மற்றும், நீட் தேர்வு மையம் திறப்பு விழா , அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் விழா என்ற முப்பெரும் நடைபெற்றது இவ்விழாவினை அமைச்சர் செங்கோட்டையன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் . நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நீட் பயிற்சி மையத்தை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். மேலும் தமிழக மாணவர்கள் நீட் தேர்விற்கு தயார் செய்யும் வகையில் 412 பயிற்சி […]
நெல்லை: தினகரன் தான் வெற்றி பெறுவோம் என்று பகல் கனவு காண்கின்றார் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம், நெற்கட்டும்செவலில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்த நாளான இன்று நெற்கட்டும்செவலில் உள்ள பூலித்தேவன் சிலைக்கு மரியாதையை செலுத்த தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருகை புரிந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய துணை முதல்வர் கூறியதாவது.., டிடிவி தினகரன் பகலில் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டு, பகல் கனவு […]
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தின் முதல் மாடியில் தீவிபத்து ஏற்பட்டது. மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் மட்டும் சேதம் அடைந்துள்ளது.உடனே பாளையங்கோட்டை தீயணைப்பு துறை வீரர்கள் தகவல் அறிந்து விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
தமிழகத்தில் விஷ்வ இந்து பரிஷத் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செய்வதை கண்டித்து மதுரையில் சாலை மறியல் போராட்டம் செய்த எஸ்டிபிஐ கட்சியினரை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ய ரத யாத்திரை நடைபெற்று வருகிறது. இதற்கு திமுக,திக,விசிக,கம்யூனிஸ்ட்,நாம் தமிழர் போன்ற பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, தமிழகத்தில் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை நுழைவதை கண்டித்தும், அதற்கு எதிராக குரல் கொடுக்கும் தலைவர்களின் கைதை கண்டித்தும் […]
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க 500க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே ரத யாத்திரை நுழைவதைத் தடுப்போம் என அறிவித்த கொளத்தூர் மணி, ஜவாஹிருல்லா, வேல்முருகன்,திருமாவளவன்,சீமான்,திமுகவின் செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும்,சாலை மறியல் போன்ற போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் திருநெல்வேலியில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து பாளை பழைய பஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட திமுக வினரை […]
நெல்லை பேட்டையில் 2016 ஆம் ஆண்டு தருன்மாதவ் என்ற சிறுவனை கொலைச்செய்த குற்றவாளி ஆறுமுகத்திற்க்கு தூக்கு தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நெல்லை பேட்டையில் 2016 ஆம் ஆண்டு தருன்மாதவ் என்ற சிறுவனை கொலைச்செய்த குற்றவாளி ஆறுமுகத்திற்க்கு தூக்கு தண்டனை மற்றும் 5 லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் விதிப்பு மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல்காதர் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க 500க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே ரத யாத்திரை நுழைவதைத் தடுப்போம் என அறிவித்த கொளத்தூர் மணி, ஜவாஹிருல்லா,, வேல்முருகன் உள்ளிட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ரத யாத்திரைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க சென்ற போது கைது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.செங்கோட்டை அருகே பாறைப்பட்டி என்ற பகுதியில் போலீசாரால் கைது […]