முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திண்டுக்கல் பயணம்…!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திண்டுக்கல் பயணம் செய்கிறார்.  திண்டுக்கல் தோட்டனுாத்துவில் ரூ.17.17 கோடி செலவில், இலங்கை தமிழர்களுக்காக 321 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளை பயனாளிகளிடம் வழங்கும் விழா நடைபெறவுள்ளது. இன்று மாலை நடைபெறும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 321 பயனாளிகளிடம் வீடுகளை ஒப்படைக்க உள்ளார். முதல்வர் வருகையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விழாவில் அமைச்சர் சக்கரபாணி, பெரியசாமி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.