சனாதனம் வரலாற்றை திரித்து பேச வேண்டாம்! ஆளுநர் ரவிக்கு அய்யா வைகுண்டர் தலைமைபதி கண்டனம்

R.N.Ravi: மனுதர்மத்துக்கு எதிராக குரல் கொடுத்தவர் அய்யா வைகுண்டர் எனவும் வரலாறு தெரியாமல் வாய் திறக்கக் கூடாது என்றும் ஆளுநர் ரவி பேசியதற்கு அய்யா வழி தலைமைபதி நிர்வாகி பால பிரஜாபதி கண்டனம் தெரிவித்துள்ளார். அய்யா வைகுண்டரின் 192 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று பேசினார். அவர் பேசும் போது, “அய்யா வைகுண்டர் தோன்றிய சமூக காலகட்டம் சனாதன தர்மத்திற்கு பாதிப்பு ஏற்பட்ட காலகட்டம். சனாதன தர்மத்தை காக்கவே … Read more

ஆன்லைன் தடை மசோதா.! விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு ஆளுநர் ரவி கடிதம்.!

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் தடை சட்ட மசோதாவுக்கு விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு ஆளுநர் ரவி கடிதம் எழுதியுள்ளார்.  கடந்த அக்டோபர் 19ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதித்து சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருகிறார் என்கிற குற்றசாட்டும் அவர் மீது இருந்து வருகிறது. சட்ட சபையில் நிறைவேற்றபட்ட சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க 6 வார கால அவகாசம் உண்டு … Read more