மத்திய அரசின் தடையை தொடர்ந்து சென்னையில் உள்ள பிஎப்ஐ தலைமை அலுவலகத்திற்கு சீல்..!

மத்திய அரசின் தடையை தொடர்ந்து சென்னையில் உள்ள பிஎப்ஐ தலைமை அலுவலகத்திற்கு காவல்துறையினர் சீல் வைத்துள்ளனர்.   தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தொடர்புடைய அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு சோதனை நடத்தியது. இந்த சோதனையின்போது நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட பிஎஃப்ஐ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சட்டவிரோதமான இயக்கம் என கூறி 5 … Read more

கருமுட்டை விவகாரம் – மற்றுமொரு ஸ்கேன் சென்டருக்கு சீல் வைப்பு

சேலம் தனியார் மருத்துவமனை ஸ்கேன் சென்டருக்கு மருத்துவத்துறை இணை இயக்குனர் நெடுமாறன் உள்ளிட்ட அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து,பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் உள்ளிட்ட 4 பேர் ஏற்கனவே போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இதுகுறித்து நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்  அவர்கள், சிறுமி கருமுட்டை வழக்கில் விசாரணையின் இறுதி அறிக்கையை … Read more

கருமுட்டை விவகாரம் – ஸ்கேன் சென்டருக்கு சீல் வைப்பு..!

கருமுட்டை விவகாரத்தில் சுதா மருத்துவமனையின் ஸ்கேன் சென்டருக்கு சீல் வைப்பு.  ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து,பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் உள்ளிட்ட 4 பேர் ஏற்கனவே போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இதுகுறித்து நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்  அவர்கள், சிறுமி கருமுட்டை வழக்கில் விசாரணையின் இறுதி அறிக்கையை குழு சமர்ப்பித்துள்ளது. கருமுட்டை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட … Read more

#BREAKING: வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!

நெகிழி பொருள்களை வைத்துள்ள வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீலகிரி, கொடைகானலில் நெகிழி பயன்பாட்டுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீலகிரி, கொடைகானலில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்களை வைத்துள்ள வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், அபராதம் விதிப்பது மட்டும் தீர்வாகாது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.