டி20 கிரிக்கெட் தொடர் – ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியானது இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. இந்த டி20 தொடரில் இந்திய அணி சூரியகுமார் தலைமையிலும், அதேபோல ஆஸ்திரேலியா அணி மேத்யூ வெயிட் தலைமையில்களமிறங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த நிலையில் அதிரடியாக களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது.

டி20 கிரிக்கெட் தொடர் – இந்திய அணிக்கு 209 ரன்கள் இலக்கு..!

ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த ஜோஷ் இங்கிலீஸ் 50 பந்துகளில் 110 ரன்களை குவித்து தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஸ்டீவன் ஸ்மித் 52 ரன்கள் எடுத்தார். இந்த நிலையில், இந்திய அணிக்கு 209 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்து இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது. அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 80 ரன்களும், இஷான் கிஷான் 58 ரன்களும் எடுத்தனர்.

ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், இந்த டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியவை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.