அதிமுக்கிய வழக்குகள் ஜூனியர் நீதிபதிகளுக்கு ஒதுக்கீடு!

உச்சநீதிமன்ற நிர்வாகம் முறையாக நடைபெறவில்லை என்றும், வழிமுறைகள்படி நீதிபதிகளுக்கு வழக்குகள் ஒதுக்கப்படவில்லை என்றும் நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் லோக்கூர் ஆகியோர் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், பிரபல ஆங்கில பத்திரிகையான டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 20 ஆண்டுகளாக, தேசத்திற்கே மிகவும் அதிமுக்கியமானதாக கருதப்பட்ட 15 வழக்குகள், ஜூனியர் நீதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
போஃபர்ஸ் ஊழல் வழக்கு, ராஜீவ்காந்தி படுகொலை வழக்கு, எல்.கே.அத்வானி மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கு, சொராபுதீன் ஷேக் என்கவுண்டர் வழக்கு போன்றவை மூத்த நீதிபதிகளுக்கு ஒதுக்கப்படவில்லை என்றும், ஜூனியர் நீதிபதி தலைமையிலான அமர்வுகளுக்கே இந்த வழக்குகள் பட்டியலிடப்பட்டதாகவும் பிரபல ஆங்கில நாளிதழ்  கூறியுள்ளது.

Leave a Comment