முதல் முறையாக சூப்பர் ஓவர்! ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா.!

இந்திய மகளிர் அணி, முதன்முறையாக சூப்பர் ஓவரில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது.

ஆஸ்திரேலிய மகளிர் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது. மும்பையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாகி பெத் மோனி 82 ரன்களும், தஹிலா மெக்ராத் 70 ரன்களும் குவித்தனர். 188 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் ஸ்ம்ரிதி மந்தனா(79), ஷெபாலி வர்மா (34) உதவியுடன் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. இரு அணிகளும் 187 ரன்கள் குவித்ததால் ஆட்டத்தில் சூப்பர் ஓவர் முறை பின்பற்றப்பட்டது.

மேலும் இந்திய மகளிர் அணிக்கு இது முதல் சூப்பர் ஓவர் முறை என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஓவரில் முதலில் இறங்கிய இந்தியா அதிரடியாக விளையாடி 20/1 ரன்கள் குவித்தது. ஸ்ம்ரிதி மந்தனா அதிகபட்சமாக 13 ரன்கள் குவித்தார்.

அதன்பிறகு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியால் 16/1 ரன்கள் மட்டுமே அடிக்கமுடிந்தது. இதனால் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகியாக ஸ்ம்ரிதி மந்தனா தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Comment