விளையாட்டு

சூப்பர் 8 சுற்றால் இந்திய அணிக்கு ஆப்பு தான்! இதுதான் காரணம் ..!!

டி20I: நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரின், நடைபெற இருக்கும் சூப்பர் 8 சுற்றில் விளையாடும் இந்திய அணி உட்பட பல அணிகளுக்கு பிரச்சனை நிலவும் சூழ்நிலை உள்ளது.

இந்த ஆண்டில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் நிறைவடைதற்கு முன்பே சூப்பர் 8 சுற்றில் விளையாட  போகும் 8 அணிகள் யார் யார் என்று தெரிந்துவிட்டது. இந்த அணிகளை தற்போது 2 பிரிவுகளாக பிரித்து அடுத்த சுற்றான சூப்பர் 8 சுற்று என்பது நடைபெற இருக்கிறது.

நடைபெற இருக்கும் சூப்பர் 8 சுற்றில் முதல் பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளும், இரண்டாம் பிரிவில் இங்கிலாந்து, அமெரிக்கா, தென்னாபிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் இடம்பெற்றுள்ளனர். இந்த சூப்பர் 8 சுற்றானது வருகிற ஜூன்-19 ம் தேதி தொடங்குகிறது, அதில் முதல் போட்டியாக அமெரிக்கா அணியும் தென்னாபிரிக்கா அணியும் மோதவுள்ளனர்.

தற்போது இந்த சூப்பர் 8 சுற்று பற்றிய ஒரு அப்டேட் கிடைத்துள்ளது, அது என்னவென்றால் இந்த சூப்பர் 8 சுற்றுகளில் நடைபெறும் போட்டிகள் அனைத்துமே வெஸ்ட் இண்டீஸ்ஸில் உள்ள 4 மைதானங்களில் தான் நடைபெறும்.  இந்த சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெறும் இடங்களில் தற்போது மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிலும், வருகிற 24ம் தேதி அன்று செயின்ட் லூசியாவில் நடைபெற இருக்கும் இந்திய-ஆஸ்திரேலியா அணிகள் விளையாட இருக்கும் போட்டியில் மழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. ஒருவேளை மழையின் காரணமாக இந்த போட்டி கைவிடப்பட்டால் இந்த 2 அணிகளுமே பெரிய அளவில் சிக்கலை சந்திப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது, ஏற்கனவே லீக் போட்டிகளில் பல போட்டிகள் மழையின் காரணமாக போட்டிகளை ஐசிசி கைவிட்டது. அதுவே பெரிய சர்ச்சைகளுக்கு உள்ளானது. தற்போது, சூப்பர் 8 சுற்றிலும் இப்படி நடந்தால் பெரிய பெரிய அணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை. சூப்பர் 8 சுற்றுகளிலும் மழையால் போட்டி கைவிட்டால் 2 அணிகளுக்கும் தலா 1 புள்ளிகளை வழங்குவார்கள்.

இதனால், புள்ளிப்பட்டியலிலும் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. இந்திய அணி லீக் போட்டியிலேயே ஒரு போட்டியை மழையின் காரணமாக தவறவிட்டனர் அதனால் எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் சூப்பர் 8 சுற்றில் அப்படி நடந்தால் இந்திய அணி அரை இறுதி வாய்ப்பை இழக்க நேரிடலாம் என  இந்திய அணி ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Recent Posts

மாற்றம் இன்றே துவங்குகிறது.! பிரிட்டன் புதிய பிரதமர் கீர் ஸ்டார்மர் முதல் உரை.!

UK தேர்தல்: புறக்கணிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கீர் ஸ்டார்மர் தனது முதல் உரையில் பேசினார். பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்…

3 hours ago

வெந்தய டீ குடிப்பதால் நம் உடலில் ஏற்படும் மாயாஜாலங்களை தெரிஞ்சுக்கோங்க..!

Fenugreek tea-இன்றும் பலருக்கு காலை உணவாக இருப்பது டீ  தான். அது மட்டுமல்லாமல் ட்ரெஸ்ஸில் இருந்து பலருக்கும் விடுதலை தருவதும் டீ  தான் .இந்த பால் மற்றும்…

4 hours ago

இந்த ஜெர்ஸி எண்களுக்கு ஓய்வை அறிவிக்க வேண்டும்…! பிசிசிஐக்கு சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

சுரேஷ் ரெய்னா :  இந்திய அணியின் கிரிக்கெட் ஜெர்ஸி எண் '7' -க்கு பிசிசிஐ ஓய்வை அறிவித்தனர், அதே போல '45'& '18' என்ற ஜெர்ஸி எண்ணிற்கும்…

4 hours ago

ஓட்டுனர் இல்லாமல் ஓடிய பேருந்து…டயரில் சிக்கி ஒருவர் பலி…கண்கலங்க வைக்கும் வீடியோ..!

உத்தரபிரதேசம் : எதிர்பாராமல் நடக்கும் விபத்து சம்பவங்களில் சிலர் பலியாகும் செய்திகளை பார்த்தோம் என்றாலே நமக்கு வேதனையாகிவிடும். அப்படி தான் உத்தரபிரதேசம்ஹர்தோய் மாவட்டத்தில், பெட்ரோல் பங்கில் நின்று கொண்டிருந்த…

4 hours ago

அரசு ஊழியர்களுக்கு ஒரு குட் நியூஸ்..! DA 4% உயர்வு..!

குஜராத் : குஜராத் அரசு, அம்மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்தியுள்ளது. முதல்வர் பூபேந்திர படேலின் அலுவலகத்தின்படி, ஏழாவது ஊதியக் குழுவின் கீழ்…

4 hours ago

12ம் வகுப்பு தேர்ச்சி.. B.Tech டிகிரி.! இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு!

இந்திய கடற்படை 2024 : இந்தியக் கடற்படை (Indian Navy) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 10+2 (B.Tech) கேடட் நுழைவுத் திட்டம் (நிரந்தர கமிஷன்) பணியிடங்களுக்கான விரிவான…

4 hours ago