இன்ஸ்டாகிராமில் டாப் 15-ல் விராட் கோலி.. ஒரு போஸ்ட்டுக்கு எத்தனை கோடி தெரியுமா.?

Default Image

இன்ஸ்டாகிராமில் உலகில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்களின் பட்டியலில் விராட் கோலி.. ஒவ்வொரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கும் 8.9 கோடி ரூபாய்..

அனைவராலும் அதிகம் தேடப்படும் கிரிக்கெட் வீரர் என்றால் அது விராட் கோலி தான். விராட் கோலியும் தனது ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் விளம்பரதாரர்களில் நடித்து வந்தார்.

சமீப காலமாக அவரது ஃபார்ம் இல்லாவிட்டாலும், அவரின் புகழ் ரசிகர்கள் மத்தியில் ஒரு போதும் குறைந்ததில்லை. அந்த வகையில் இன்ஸ்டாகிராமில், அவரைப் பின்தொடர்பவர்களும், அவர் வசூலிக்கும் தொகையும் பல ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.

இன்ஸ்டாகிராமில் அதிக ரசிகர்கள் பின்தொடரும் இந்திய விளையாட்டு வீரரான கோலி, அவர் பகிரும் ஒவ்வொரு போஸ்ட்டுக்கும் 1.088,000 டாலர்களை வசூலிக்கிறார். அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 8.9 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இன்ஸ்டாகிராமில் உலகில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்களின் பட்டியலில், இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலி 14வது இடத்தைப் பிடித்துள்ளார். பட்டியலில் முதல் 15 பெயர்களில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியரும் கோலி தான்.

இதற்கிடையில், ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியில் கோலி மிக முக்கிய பங்கு வகிப்பார் என ரசிகர்கள் அனைவராலும் எதிர்ப்பாக்கப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்குப் பிறகு, டி20 உலகக் கோப்பைக்காக இந்திய கிரிக்கெட் அணி அக்டோபர் 6ஆம் தேதி ஆஸ்திரேலியா செல்ல உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்