மாநிலங்களவையில் வீடியோ பதிவு..? காங்கிரஸ் எம்பியின் தகுதி நீக்கத்தை ரத்து செய்த சபாநாயகர்.!

கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்பி ரஜனி பாட்டீல், மாநிலங்களவை விதிகளை மீறி செயல்பட்டதாகவும், அங்கு நடப்பவைகளை வீடியோ எடுக்க முயற்சி செய்ததாகவும் அவர் மீது குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது

இதனை தொடர்ந்து ரஜனி பாட்டிலை மாநிலங்களவையில் இருந்து அவைத்தலைவர் ஐன்தீப் தன்கர் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ரஜனி பாட்டில் , இனி மாநிலங்கவை கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு செயல்படுவேன் என மாநிலங்களவையில் கடிதம் கொடுத்துள்ளார்.

இந்த கடிதத்தை ஏற்றுக்கொண்டு , காங்கிரஸ் எம்பி ரஜனி பாட்டில் தகுதி நீக்க நடவடிக்கையை ரத்து செய்து மாநிலங்களவை சபாநாயகர் ஜன்தீப் தன்கர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற மாநிலங்களவை கூட்டத்தொடரில் ரஜனி பாட்டில் கலந்துகொண்டார்.

இதே போல தற்போது நடைபெற்று வரும் மழைக்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டு விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி  ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் அவரது தகுதி நீக்கம் இன்னும் நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.