கிரிக்கெட்

அப்போ…தோல்வி அடைந்தால் இந்தியா வீட்டுக்கு தானா? அப்படி என்ன சிக்கல் தெரியுமா?

டி20I சூப்பர் 8: நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இன்றைய போட்டியின் சூப்பர் 8 சுற்றின் இன்றைய போட்டியில் இந்திய அணியும், வங்கதேச அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி இந்திய அணிக்கு ஒரு முக்கியமான போட்டி என்றே கூறலாம்.

அதற்கு மிக முக்கிய காரணம் சூப்பர் 8 சுற்றின் இறுதி போட்டி ஆஸ்திரேலிய அணியுடன் என்பதால் தான். தற்போது உள்ள புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் பார்த்தால் இந்திய அணி நல்ல ஒரு ரன்ரேட்டை கொண்டுள்ளது.

ஆனால், இன்றைய போட்டியில் மட்டும் இந்தியா அணி தோல்வியை கண்டால் அந்த ரன்ரேட் குறைந்து விடும். மேலும், வங்கதேச அணிக்கும் 2 புள்ளிகள் கிடைத்துவிடும். இதன் காரணமாக இந்திய அணி இன்றைய போட்டியை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகின்றனர்.

ஒரு வேளை இந்த போட்டியிலும், அடுத்த போட்டியான 24-ம் தேதி அன்று நடைபெற இருக்கும் ஆஸ்திரேலியா அணியுடனான போட்டியிலும் தோல்வியை கண்டால் 2 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலையோ அல்லது வெளியேற கூடிய சூழ்நிலையோ ஏற்பட்டு விடும்.

இதனால், இந்த போட்டியின் வெற்றி என்பது மிகமுக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதை இப்போது நினைவு படுத்துவதற்கான காரணம் என்னவென்றால் மிக முக்கியமான சர்வேதேச போட்டிகளில் வங்கதேச அணி இந்திய அணியை வெற்றி பெற்று அத்தொடரிலிருந்து வெளியேற்றவும் செய்திருக்கிறது.

மேலும், ஆஸ்திரேலியா அணி மிக வலிமையான ஒரு அணியாக இருந்து வருகின்றனர். இது வரை இந்த தொடரில் தோல்வியே காணாமல் விளையாடி வருகின்றனர். மேலும், நாளை காலை ஆப்கானிஸ்தான் அணியுடன் நடைபெற இருக்கும் போட்டியில் ஆஸ்திரேலியா அணி மோதுகிறது.

இந்த போட்டியில் எப்படியும் வெற்றி பெற்றார் என்றால் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் விளையாடும் போட்டியானது மிகவும் எதிர்பார்ப்பு மிகுந்த போட்டியாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.  தற்போது இந்திய அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

என்னை மன்னித்து விடுங்கள்.. தோல்வியை ஒப்புக்கொண்ட ரிஷி சுனக்.!

UK தேர்தல்: பிரிட்டனில் ஆட்சியை இழந்த ரிஷி சுனக், தோல்விக்கு பின்னர்,  " இந்த தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள்." என பேசினார். பிரிட்டன்…

19 mins ago

அரை இறுதிக்கு முன்னேறியது அர்ஜென்டினா ..! பெனால்டியில் த்ரில் வெற்றி..!

கோப்பா அமெரிக்கா : இந்த ஆண்டில் நடைபெற்று வரும் கோப்பா அமெரிக்கா தொடரில் லீக் சுற்றுக்கள் முடிவடைந்து, இன்று அடுத்த சுற்றான கால் இறுதி சுற்று தொடங்கியது. இதில்…

28 mins ago

அனைத்து எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு.!

சென்னை: மக்களுடன் முதல்வர், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் ஆகிய நிகழ்வுகளில் அனைத்து எம்பிக்களும், எம்எல்ஏக்களும் கலந்து கொள்ள வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு…

1 hour ago

10 லட்சம் கோடியை எட்டும் உணவு சேவை சந்தை..? ஸ்விக்கி கணக்கெடுப்பு!!

ஸ்விக்கி : இந்தியாவின் உணவுச் சேவைச் சந்தை, உணவருந்துதல் மற்றும் ஆர்டர் செய்வதை உள்ளடக்கமாகக்கொண்டு, ஆண்டுதோறும் 10-12% வரை அதன் வளர்ச்சி அதிகரிக்கும் எனவும், 2030 ஆம்…

2 hours ago

ஹத்ராஸில் பறிபோன 121 உயிர்கள்.. ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல்!!

உத்தரப்பிரதேசம் : ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி 121 உயிர்கள் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. தற்பொழுது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி…

2 hours ago

பிரிட்டன் தேர்தல் : ரிஷி சுனக் கட்சி பெரும் தோல்வி.! மாபெரும் வெற்றிபெற்ற தொழிலாளர் கட்சி.!

UK தேர்தல்: ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 81 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. தொழிலாளர் கட்சி 360 இடங்களை வென்றுள்ளது. இங்கிலாந்து நாட்டில் நேற்று (வியாழன்) 650 தொகுதிகளுக்கும்…

2 hours ago