ஆசிரியர்கள் வாழ்க்கை முழுக்க போராடிக்கொண்டே இருக்க வேண்டுமா? – மநீம

ஆசிரியர்கள் வாழ்க்கை முழுக்க போராடிக்கொண்டே இருக்க வேண்டுமா? மக்கள் நீதி மய்யம் கண்டன அறிக்கை

தமிழகத்தில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் ஏராளமானோர் வேலைக்காகக் காத்திருக்கும்போது, மிகக் குறைந்த சம்பளத்தில், தற்காலிக அடிப்படையில் ஆசிரியர் நியமனம் என்ற அறிவிப்பை வெளியிட்டிருப்பது கண்டனத்துக்குரியது என மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ‘கொரானாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வித் தரம் குறைந்துள்ளதாக தேசிய சாதனை ஆய்வு அமைப்பு, புள்ளிவிவரங்களுடன் தெரிவித்துள்ளது. தேசிய சராசரியைக் காட்டிலும் கல்வித் தரம் குறைந்துள்ள நிலையில், போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டுமென மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் 13,331 ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக, தற்காலிகமாக நிரப்பிக் கொள்ள பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.7,500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10,000, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.12,000 எனமிகக் குறைந்த ஊதியமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிரந்தர ஆசிரியர்களின் சம்பளத்தில், பாதியாவது தற்காலிக ஆசிரியர்களுக்கு நிர்ணயிக்க வேண்டாமா? மிகக் குறைந்த சம்பளத்தில், அதுவும் தற்காலிக அடிப்படையில் பணி வழங்கும்போது, அவர்கள் மாணவர்களுக்கு சிறப்பாக கல்வி கற்பிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா?

தமிழ்நாடு முழுவதும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் 1.20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கும் சூழலில், யாரை ஏமாற்ற இந்த பணி நியமன உத்தரவு? அண்மையில் வெளியான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அதிர்ச்சியளிப்பதாக இருந்தன. தாய்மொழியான தமிழ்ப் பாடத்திலேயே 47 ஆயிரம் பேர் தேர்ச்சி பெறாதது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப்பள்ளிகளை மேம்படுத்தியாக வேண்டிய சூழலில் இருக்கிறோம்.

நடப்பாண்டு பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.36,896 கோடி எனும் பிரம்மாண்டமான தொகையை ஒதுக்கிய நிலையில், ஆசிரியர்கள் நியமனத்தை தற்காலிக அடிப்படையில் மேற்கொள்வது ஏன்? தற்காலிக ஆசிரியர் நியமனம் எனும் முடிவை உடனடியாக கைவிட்டு, திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது கொடுத்த வாக்குறுதியின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.’ என தெரிவித்துள்ளனர்.

Recent Posts

தொடர் மழை…நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை!

சென்னை : நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்…

13 mins ago

சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் பலி!

சென்னை: ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து 8 பேர்உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப்…

14 mins ago

வீட்டுக்குள் செடி வளர்க்கிறீர்களா? அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

Plant-வீட்டிற்குள் எந்தெந்த செடிகளை வளர்க்கலாம் என்றும் அதனால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். தற்போது மாறி வரும் நவீன உலகில் காடுகள் ,வயல்வெளிகள் இருக்கும்…

50 mins ago

ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய போட்டி !! 4- வதாக பிளேஆப் முன்னேற போகும் அணி எது ?

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி சென்னை அணியை வீழ்த்தி பிரம்மாண்ட வெற்றியை பெற்று பிளே ஆப் செல்லுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்து…

3 hours ago

IPL2024: மும்பையை வீழ்த்தி ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த லக்னோ..!

IPL2024: மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டைகள் இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இதனால் லக்னோ அணி18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

9 hours ago

லாவோஸ், கம்போடியாவில் வேலை மோசடி… வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை..!

லாவோஸ், கம்போடியா ஆகிய நாட்டிற்கு செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை தேடி லாவோஸ் மற்றும் கம்போடியாவுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு…

12 hours ago