எந்த நேரத்திலும் சசிகலா சிறையில் இருந்து விடுதலை ? சிறைத்துறையிடம் மனு

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா ,எப்போது வேண்டுமானாலும் விடுவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சசிகலாவிற்கு  சிறை தண்டனை விதிக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.சில நாள்களுக்கு முன் கர்நாடக சிறைத்துறை நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை சிறையில் இருந்து சில மாதங்களில் விடுதலை செய்ய உள்ளதாக தகவல் வெளியானது.

அண்மையில்  தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சசிகலா விடுதலை குறித்து சிறை நிர்வாகத்திடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த சிறை நிர்வாகம்,சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா 2021 -ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையாகிறார் என்று தெரிவித்தது.

அபராதத்தொகை ரூ.10.10 கோடியை கட்டாவிடில் 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி சசிகலா விடுதலையாவார் என்று சிறை நிர்வாகம் பதில் தெரிவித்தது. ஏற்கனவே சுதாகரன், தனது அபராதத் தொகை ரூ.10 கோடியை நீதிமன்றத்தில் செலுத்தி உள்ளார். ஆகவே சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவிற்கு விதிக்கப்பட்ட ரூ.10.10 கோடி அபராதம்  அவரது சார்பில் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.எனவே அவர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் விடுதலையாவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் தான் , நன்னடத்தை விதிகள்படி 129 நாட்கள் சலுகை உள்ளதால் சசிகலாவை முன்கூட்டியே சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் சிறைத்துறையிடம் மனு அளித்துள்ளார். சிறைத்துறையின் பரிசீலனையில் அடிப்படையில்,சசிகலா எப்போது வேண்டுமானாலும் விடுவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.