தெலங்கானாவில் புதிய முதல்வராக பதவியேற்கும் ரேவந்த் ரெட்டி..!

119 இடங்களைக் கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபை வாக்குப்பதிவு  கடந்த நவம்பர் 30ஆம் தேதி நடைபெற்றது. இந்த சட்டமன்றத் தேர்தல் 2023 முடிவுகள் டிசம்பர் 3 அன்று அறிவிக்கப்பட்டன. அம்மாநிலத்தில் காங்கிரஸ் 64 இடங்களிலும், பிஆர்எஸ் 39 இடங்களிலும் வெற்றி பெற்றது. பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதைத்தொடர்ந்து,  தெலங்கானாவில் காங்கிரஸை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற ரேவந்த் ரெட்டி, அம்மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்கிறார்.  தெலுங்கானா மாநிலத்தின் அடுத்த முதல்வராக தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி பதவியேற்பார் என அக்கட்சி  அறிவித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், பதவியேற்பு விழா டிசம்பர் 7-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என்று தெரிவித்தார். மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்பால் ரெட்டியின் மருமகன் ரேவந்த் ரெட்டி, 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக மல்காஜ்கிரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு டிஆர்எஸ் வேட்பாளர் மர்ரி ராஜசேகர ரெட்டியை தோற்கடித்தார்.

2023 சட்டமன்றத் தேர்தலில், ரேவந்த் ரெட்டி கோடங்கல் மற்றும் காமரெட்டி சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டார். ரேவந்த் ரெட்டி கோடங்கல் தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றார், ஆனால் காமரெட்டி தொகுதியில் தோல்வியடைந்தார்.

Recent Posts

தொடர் கனமழை 5 நாளில் 11 பேர் பலி! வெளியான எச்சரிக்கை!

சென்னை : தமிழ்நாட்டில் கனமழை காரணமாக கடந்த 5 நாளில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், தொடர்…

20 mins ago

திரவ நைட்ரஜன் கலந்த பான் மசாலா சாப்பிட்ட சிறுமிக்கு வயிற்றில் ஓட்டை!

சென்னை: திரவ நைட்ரஜன் கலந்த பானை சாப்பிட்ட 12 வயது சிறுமி வயிற்றில் ஓட்டை விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் திரவ நைட்ரஜன் கலந்த பான்…

1 hour ago

பிளே-ஆஃப் போட்டிக்கும் ரிசர்வ் நாள் உண்டா ? இதுதான் ஐபிஎல் ரூல்ஸ் !

சென்னை : ஐபிஎல் தொடரில் பிளேஆப் சுற்றில் நடைபெறும் போட்டிக்கு ரிசர்வ் நாள் உள்ளதா, அதை பற்றி ஐபிஎல் விதிகள் என்ன சொல்கிறது என்பதை பற்றி தற்போது…

2 hours ago

பழைய பேருந்துகளை பழுதுபார்க்க வேண்டும்! திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

சென்னை : பழைய பேருந்துகளை பழுதுபார்க்க வேண்டும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக புதிய பேருந்துகளை…

2 hours ago

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது.! இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி…

2 hours ago

அவசர அவசரமாக ‘குட் பேட் அக்லி’ போஸ்டர் வெளியிட இது தான் காரணமா?

சென்னை : குட் பேட் அக்லி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவாக வெளியான காரணம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. ஆதிக்ரவிசந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து…

2 hours ago