மதுரை ஜல்லிக்கட்டு: காளைகளுக்கான முன்பதிவு தொடங்கியது

பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளும் பல மாவட்டங்களில் தொடங்கப்பட்டு நடைபெறும். இதில் குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மிகவும் பிரபலமானது என்றே சொல்லலாம். இந்த ஆண்டு (2024) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜனவரி 15ம் தேதியும், பாலமேட்டில் வரும் 16-ஆம் தேதியும் அலங்காநல்லூரில் 17-ஆம் தேதி என ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது.

இதனையடுத்து, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், சமீபத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்வதற்கான முன்பதிவு ஆன்லைன் மூலம் நடத்தலாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: அனைத்து சமூகத்தினரையும் அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்த உத்தரவு!

எனவே,  மதுரை மாவட்டடம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், ஆகியவற்றில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க விருப்பம் உள்ள மாடுபிடி வீரர்கள், காளைகள் முன்பதிவு செய்ய madurai.nic.in  என்ற இணையதளத்திற்கு சென்று அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (ஜன10)-ஆம் தேதி முதல் நாளை (ஜன.11-ம்) தேதி வரை மட்டுமே முன்பதிவு செய்யலாம். எனவே, நாளை(ஜன.11) நண்பகல் 12 மணி வரை முன்பதிவு செய்துகொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.  மேலும், முறைகேடுகளை தடுக்க QR code இணைப்புடன் டோக்கன் வழங்கப்படும் .

ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, அதற்கான டோக்கனை ஆன்லைன் மூலமே  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அறிவிக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை விண்ணப்பம் செய்து முடித்தவுடன் ஆவணங்கள் சரி பார்க்கப்பட்ட பின்னர் அதில் யாரெல்லாம் தகுதியுள்ளவர்களோ அந்த விண்ணப்பங்களுக்கு மட்டுமே டோக்கன் வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.