கொரோனாவை கண்டறியும் ரேபிட் ஆன்டிபாடி டெஸ்ட் முறை! யாருக்கெல்லாம் இச்சோதனை?!

கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. தற்போதுவரை பாலிமரேஸ் செயின் ரியாக்சன் எனப்படும் பி.சி.ஆர் முறைப்படி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. தொண்டை, நாசி பகுதியில் இருக்கும் சளி மாதிரியை கொண்டு கொரோனா முடிவுகள் வெளியாக 5 முதல் 12 மணிநேரம் ஆகிறது. தமிழகத்தில் உள்ள 19 ஆய்வகங்களில் இந்த முறைதான் பயன்பாட்டில் உள்ளது.

இதனால், முடிவுகள் வெளியாக காலதாமதம் ஆவதால், அதற்குள் நோய் தொற்று பரவக்கூடும் என்பதால் , விரைவாக முடிவுகளை கண்டறியும் ரேபிட் ஆன்டிபாடி டெஸ்ட் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்று 50,000 ரேபிட் டெஸ்ட் கருவிகள் தமிழகத்திற்கு வந்துள்ளன. மொத்தம் 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்தார்.

இந்த ரேபிட் ஆன்டிபாடி டெஸ்ட் முறை என்பது, ஒருவரது உடலில் கொரோனா தொற்று ஏற்பட்டால், அந்த வைரசை எதிர்க்கும் எதிர்புரதமான ( ஆன்டிபாடி ) IgM, IgG ஆகியவை உண்டாகும். இந்த ஆன்டிபாடி நம் உடலில் சுரந்திருக்கிறதா இல்லையா என்பதை ரேபிட் ஆன்டிபாடி டெஸ்ட் கருவி மூலம் அரை மணிநேரத்தில் கண்டறிந்து விடலாம்.  நமது உடலில் இருந்து ரத்தம், பிளாஸ்மா, சீரம் ஆகியவை கொண்டு இச்சோதனை செய்யப்படும்.    

இதன் மூலம் முதற்கட்டமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் குடும்பத்தார், உறவினர்கள், பகுதிவாசிகள், வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள், மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் ஆகியோர்களுக்கு ரேபிட் டெஸ்ட் நடத்த உள்ளனர். 

மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Recent Posts

தொடர்ந்து குறையும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதோ.!

Gold Price: கடந்த வாரம் ரூ.55 ஆயிரத்திற்கும் மேல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.53ஆரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும்…

16 mins ago

பாக்ஸ் ஆபிஸில் மிரட்டியதா அரண்மனை 4? முதல் நாள் வசூல் விவரம் இதோ!

Aranmanai 4 Box Office : அரண்மனை 4 திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகி…

23 mins ago

பிரேசிலை புரட்டிப்போட்ட கனமழை.. 39 பேர் பலி.. 70 பேர் மாயம்.!

Heavy Rain in Brazil:  பிரேசிலில் பெய்து வரும் கனமழையால் 39 பேர் உயிரிழந்துள்ளனர், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இயற்கை எப்போ எப்படி…

29 mins ago

15 வயது சிறுவன் கொலையாளி என தீர்ப்பு ..! சக மாணவரை இதயத்தில் குத்தி கொன்ற கொடூரம் !!

Alfie Lewis : ஆல்ஃபி லூயிஸ் என்ற இளைஞரை கொலை செய்த குற்றத்திற்காக 15 வயது சிறுவன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. லண்டன் மாகாணத்தில் லீட்ஸில் உள்ள ஹார்ஸ்ஃபோர்த்…

35 mins ago

அவதூறு வழக்கு… கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் வாகனம் விபத்தில் சிக்கியது.!

Savukku Sankar : தேனியில் கைதான சவுக்கு சங்கரை கோவை அழைத்து வரும் போது வாகனம் விபத்தில் சிக்கியது. சவுக்கு மீடியா (Savukku Media) எனும் பிரபல…

48 mins ago

ஊழியரை இரும்பு ராடால் தாக்கிய வழக்கில் கேஜிஎஃப் விக்கி கைது.!

KGF Vicky : ஊழியரை இரும்பு ராடால் தாக்கிய வழக்கில் பாஜக இளைஞரணி முன்னாள் நிர்வாகி கேஜிஎஃப் விக்கி கைது செய்யப்பட்டார். சென்னை வண்ணாரப்பேட்டையில் ஆண்களுக்கான ஆடைகள்…

49 mins ago