ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!

ஐபிஎல்2024: ராஜஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 224 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்றைய போட்டியில் ராஜஸ்தான் , கொல்கத்தா அணி மோதியது. இந்த போட்டி ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசி தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 223 ரன்கள் எடுத்தனர்.

ராஜஸ்தான் அணியில் குல்தீப் சென், அவேஷ் கான் தலா 2 விக்கெட்டையும்,  சாஹல், டிரென்ட் போல்ட் தலா 1 விக்கெட்டை பறித்தனர். கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக சுனில் நரேன்  109 ரன்களும்,  ரகுவன்ஷி 30 ரன்களும் எடுத்தனர். 224 ரன்கள் என்ற பெரிய இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால்,  ஜோஸ் பட்லர் இருவரும் களமிறங்கினர். இலக்கு பெரிது என்பதால் ஆட்டம்தொடக்கமே அடித்து விளையாட ராஜஸ்தான் அணி முடிவு செய்தனர். அதன்படி தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 9 பந்தில் 19 ரன்கள் எடுத்து இருந்தபோது வெங்கடேஸ் ஐயரிடம் கேட்சை கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

அடுத்து வந்த சஞ்சு சாம்சன் வெறும் 12 ரன்கள் எடுத்து 5-வது ஓவரில் விக்கெட்டை இழந்தார். அடுத்து களம் கண்ட  ரியான் பராக் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். அது நீண்ட நேரம் நிலைக்கவில்லை, 34 ரன்கள் எடுத்திருந்தபோது ரஸ்ஸலிடம் கேட்சை கொடுத்து நடையை கட்டினார்.

அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து துருவ் ஜூரல் 2,  அஷ்வின் 8 ரன்களிலும், ஹெட்மியர் கோல்டன் டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தனர். இருப்பினும் மறுமுனையில் விளையாடிய தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் நிதானமாக விளையாடி 36 பந்தில் அரைசதம் அடித்தார்.

17-வது ஓவரை சுனில் நரேன்  வீசினார். அந்த ஓவரில் ரோவ்மேன் பவல் முதல் 3 பந்தில் 2 சிக்ஸர் , 1 பவுண்டரி விளாசினார். அடுத்த பந்திலே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இருப்பினும் களத்தில் அதிரடியாக விளையாடி வந்த  ஜோஸ் பட்லர் 55 பந்தில் சதம் விளாசி  107* ரன்களுடன் ஆட்டமிழக்காமல் கடைசிவரை களத்தில் இருந்து அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார். அதில் 6 சிக்ஸர்,  9  பவுண்டரி  அடங்கும்.

இறுதியாக ராஜஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 224 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவரை ராஜஸ்தான் 7 போட்டியில் விளையாடி 6 போட்டிகள் வெற்றியும்,  1 போட்டியில் தோல்வியும் தழுவியுள்ளது. அதே நேரத்தில் கொல்கத்தா அணி இதுவரை 6 போட்டிகள் விளையாடி உள்ளது. இதில் 4 போட்டியில் வெற்றியும், 2 போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் அணி தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்து  உள்ளது.

 

murugan

Recent Posts

வெப்பநிலை உயரும்…மழைக்கும் வாய்ப்பு இருக்கு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

Weather Update : தமிழகத்தில் வெப்பநிலை உயரும் எனவும்,  மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு…

18 mins ago

சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

Naxalites: சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மற்றும் கான்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அபுஜ்மத் என்ற வனப்பகுதியில் பாதுகாப்புப்…

18 mins ago

பாலியல் புகார்… கர்நாடகா எம்.பி பிரஜ்வல் சஸ்பெண்ட்.! மஜத கட்சி அதிரடி நடவடிக்கை…

Prajwal Revanna : பாலியல் புகார் விசாரணை முடியும் வரையில் மஜத எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பியாக…

27 mins ago

வெப்ப அலையில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி.?

Heat Wave: வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அதிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்து கொள்வது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழ்நாடு…

1 hour ago

‘அவர் எனக்கு இன்னோரு மகன்’ ! ரிஷப் பண்ட் குறித்து கவலைப்பட்ட நடிகர் ஷாருக்!!

Shah Rukh Khan : ரிஷப் பண்டுக்கு ஏற்பட்ட கார் விபத்தில், அவருக்கு ஒன்றும் ஆக கூடாது என்று நடிகர் ஷாருக் கான் கவலைப்பட்ததாக நேற்றைய போட்டியின் முடிவின்…

1 hour ago

பும்ராவின் ஆட்டம் மந்தமா இருந்துச்சு! விமர்சித்த ஆகாஷ் சோப்ரா!

Jasprit Bumrah : கடந்த 2 போட்டிகளில் பும்ராவின் ஆட்டம் மந்தமாக இருக்கிறது என ஆகாஷ் சோப்ரா விமர்சித்து பேசியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும்…

1 hour ago