#CSKvRR: சூழல் பந்தில் சுருண்ட ராஜஸ்தான் அணி.., சென்னை அபார வெற்றி ..!

ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை பறிகொடுத்து 143 ரன்கள் எடுத்து 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினர்.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 12-ம் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தனர்.சென்னை அணி  20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை பறிகொடுத்து 188 ரன்கள் எடுத்தனர். சென்னை அணியில் அதிகபட்சமாக டு பிளெசிஸ் 33 ரன்கள் எடுத்தார்.

189 ரன்கள் இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர், மனன் வோரா இருவரும் களமிறங்கினர். ஆட்டம் முதலே அதிரடியாக ராஜஸ்தான் விளையாடினர்.  மனன் வோரா 14 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்து இறங்கிய சஞ்சு சாம்சன் 1 ரன் எடுத்து வெளியேறினார்.

மேலும், நிதானமாக விளையாடி வந்த பட்லர் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் 49 ரன்னில் ஜடேஜா வீசிய சுழல் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அணியின் எண்ணிக்கை 87 இருக்கும்போது ஜோஸ் பட்லர் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ராஜஸ்தான் அணி 97 ரன்கள் எடுப்பதற்குள் சிவம் துபே, மில்லர், ரியான் பராக், மோரிஸ் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை பறிகொடுத்து 143 ரன்கள் எடுத்து 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினர். சென்னை அணியில் மொயீன் அலி 3, ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரண் தலா 2 விக்கெட்டை பறித்தனர்.

மேலும், ரவீந்திர ஜடேஜா இப்போட்டியில் 4 கேட்சை பிடித்துள்ளார். சென்னை அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 2 வெற்றி, 1 தோல்வியை தழுவியுள்ளது.

Recent Posts

அவருக்கு பாரத ரத்னா கொடுக்கணும்..! இந்திய அரசுக்கு சுனில் கவாஸ்கர் வேண்டுகோள்!!

சுனில் கவாஸ்கர் : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் அவர் மிட்-டே பக்கத்தில் எழுதிய கட்டுரையில் இந்திய அணியின் பயிற்சியாளருக்கு பாரத் ரத்னா விருது வழங்க…

5 hours ago

இந்த டிகிரி முடிச்சுடீங்களா? அப்போ இந்த அரசாங்க டேட்டா என்ட்ரி வேலை உங்களுக்கு தான்..!

சிவகங்கை : மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் (NHM) கீழ் இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலத்தில் ஆடியோலஜிஸ்ட்/ஸ்பீச் தெரபிஸ்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், ரேடியோகிராபர்,…

5 hours ago

2 நாள் பயணமாக ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி.!

பிரதமர் மோடி : மூன்று நாள் அரசு முறை பயணமாக தனி விமானம் மூலம் பிரதமர் மோடி, இன்று காலை ரஷ்யா புறப்பட்டார். அங்கு, புதின் உள்ளிட்டோரை…

5 hours ago

மிரட்டும் சண்டை…தெறிக்கும் வசனங்கள்…வெளியானது வணங்கான் டிரைலர்!

வணங்கான் : சூர்யா நடித்து வந்து பாதியில் விலகிய 'வணங்கான்'  படம் அப்டியே டிராப் ஆகிவிடும் என செய்திகள் வெளியான நிலையில், இயக்குனர் பாலா நடிகர் அருண்…

5 hours ago

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களம் : ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம்.!

விழுப்புரம்: நாளை மறுநாள் (ஜூலை 10) விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்றது. விழுப்புரம் மாவட்டம்…

5 hours ago

உங்க வீட்ல பல்லி தொல்லை அதிகமா இருக்கா? அப்போ இந்த டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணுங்க..!

Lizard- பல்லியை வீட்டிலிருந்து முழுமையாக விரட்டி அடிக்க கூடிய டிப்ஸ்களை இங்கே காணலாம். நம்மில் பலருக்கும் பாம்பை விட பல்லிக்கு  தான் அதிகம் பயம் இருக்கும். இதனால்…

5 hours ago