Categories: உலகம்

பிரதமர் மோடி தான் ‘பாஸ்’… ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனீஸ் நெகிழ்ச்சி.!

பிரதமர் மோடி தான் பாஸ் என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, அரசுமுறை பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ளார், அங்கு சிட்னியில் புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கான கலாச்சார விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரதமர் மோடியை, ஆஸ்திரேலிய பிரதமர் புகழ்ந்து பேசியுள்ளார். அப்போது பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ், பிரதமர் மோடி தான் பாஸ்  (“தலைமையாளர்”) என்று கூறினார்.

மேலும் பேசிய அல்பனீஸ், பிரதமர் மோடி பிரபலமாக உள்ளதை, மற்றொரு பிரபலம் அமெரிக்க பாடகரான ராக்ஸ்டார் புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீனுடன் ஒப்பிட்டார். ரசிகர்கள் மத்தியில் புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீனுக்கு ” தி பாஸ்” என்ற பெயர் உண்டு. சிட்னி மைதானத்தில் மோடியைப் பார்த்ததும் எழுந்த, வந்தே மாதரம், மோடி மோடி, பாரத் மாதா கி ஜெய் உள்ளிட்ட முழக்கங்கள் மற்றும் மோடிக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்த அல்பனீஸ், புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீனை விட மோடிக்கு புகழ் அதிகம் என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய ஆஸ்திரேலிய பிரதமர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது இந்தியப் பயணத்தை நினைவு கூர்ந்தார். நீங்கள் இந்தியாவைப் புரிந்து கொள்ள விரும்பினால், ரயிலிலும் பேருந்திலும் பயணம் செய்யுங்கள் என்று கூறினார். மார்ச் மாதம் நான் இந்தியாவில் இருந்தபோது, குஜராத்தில் ஹோலி கொண்டாடியது, டெல்லியில் மகாத்மா காந்திக்கு மலர்வளையம் வைத்தது, மறக்க முடியாத தருணங்கள் நிறைந்த பயணமாக இருந்தது.

பிரதமராக தனது முதல் ஆண்டை இன்று கொண்டாடுவதாகவும், நான் எனது நண்பரான பிரதமர் மோடியுடன் மேடையில் நிற்பது மிகவும் சிறப்புமிக்க தருணம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Muthu Kumar

Recent Posts

ஐபிஎல் திருவிழாவின் இன்றைய போட்டி ..! மும்பையுடன் பலப்பரீட்சை நடத்தும் கொல்கத்தா !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…

14 mins ago

அட்சய திருதியை 2024 ல் எப்போது? தங்கம் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…

1 hour ago

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

8 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

13 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

13 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

13 hours ago