தேர்தல் பிரச்சாரங்களில் குழந்தைகளை பயன்படுத்த கூடாது : இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

தேர்தல் பிரச்சாரங்களில் எந்த வகையிலும் குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது என அரசியல் கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகள் வேகமெடுத்துள்ளன. இந்நிலையில் தேர்தலின் போது குழந்தைகளை தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

அதன்படி, மக்களவை தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் குழந்தைகளை வைத்து பிரசாரம் மேற்கொள்ளவோ, சுவரொட்டிகள் ஒட்டுதல், துண்டு பிரசுரம் விநியோகம் செய்யவோ, முழக்கம் எழுப்பவோ, பேரணிகளில் ஈடுபடுத்துவதையோ தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சண்டிகர் தேர்தலில் ஜனநாயக படுகொலை.! உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி.! 

மேலும், அரசியல் கட்சிகள் மற்றும் அதன் வேட்பாளர்கள் அரசியல் கட்சியின் கொள்கைகள் மற்றும் சாதனைகள் தொடர்பாக, அரசியல் பிரச்சாரத்தின் சாயலை உருவாக்கும் கவிதை, பாடல்கள், பேச்சு உள்ளிட்ட மறைமுக நடவடிக்கைகளிலும் குழந்தைகளை ஈடுபடுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

 

 

 

Leave a Comment