உள்ளாட்சியின் போது உயிர் துறந்த காவல்துறையினருக்கு முதல்வர் இரங்கல் மற்றும் நிதியுதவி..

  • தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 27 மாவட்டங்களில் கடந்த மாதம் 27 மற்றும் 30ம் தேதிகளில் அமைதியாக நடந்து முடிந்தது.
  • இந்த  உள்ளாட்சி தேர்தல் பணியின் போது உயிரிழந்த 3 காவலர்களின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியம், ராச்சாண்டார் திருமலை அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவின் போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வேலாயுதம்பாளையம் தலைமைக் காவலர் திரு. ஜான்சன் வயது 42 ஈடுபட்டிருந்தார். பணியின் போதே அவருக்குத்  திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்த அலுவலர்கள் உடனே ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்தனர். எனினும், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே தலைமைக் காவலர் ஜான்சன் உயிர் தியாகம் செய்தார். இதே போல், உள்ளாட்சி தேர்தல் பணியின் போது சிறப்பு உதவி ஆய்வாளர்கள்  முருகதாஸ் மற்றும்  அறிவுடை நம்பி ஆகியோரும் தங்களது உயிரை பணியின் போது தியாகம் செய்தனர். இந்த உள்ளாட்சி தேர்தல் பணியின் போது உயிரிழந்த  மூன்று காவலர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  தலைமைக் காவலர் ஜான்சன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள்  முருகதாஸ் மற்றும் அறிவுடை நம்பி ஆகிய 3 காவலர்களின்  குடுமபத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவியை முதலமைச்சரின் பொது நிவரண  நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Kaliraj

Recent Posts

அவதூறு வழக்கு… கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் வாகனம் விபத்தில் சிக்கியது.! 

Savukku Sankar : தேனியில் கைதான சவுக்கு சங்கரை கோவை அழைத்து வரும் போது வாகனம் விபத்தில் சிக்கியது. சவுக்கு மீடியா (Savukku Media) எனும் பிரபல…

6 mins ago

ஊழியரை இரும்பு ராடால் தாக்கிய வழக்கில் கேஜிஎஃப் விக்கி கைது.!

KGF Vicky : ஊழியரை இரும்பு ராடால் தாக்கிய வழக்கில் பாஜக இளைஞரணி முன்னாள் நிர்வாகி கேஜிஎஃப் விக்கி கைது செய்யப்பட்டார். சென்னை வண்ணாரப்பேட்டையில் ஆண்களுக்கான ஆடைகள்…

7 mins ago

நெல்லை காங். தலைவரை 2 நாட்களாக காணவில்லை – மகன் காவல்நிலையத்தில் புகார்

KPK Jeyakumar : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமாரை காணவில்லை என அவருடைய மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நெல்லை…

33 mins ago

இந்திய பகுதிகளுடன் நேபாளத்தின் புதிய 100 ரூபாய் நோட்டு.! வெடித்த புதிய சர்ச்சை…

Nepal Currency : இந்திய எல்லைகளை உள்ளடக்கி புதிய வரைபடத்துடன் நேபாள அரசு புதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளது. இந்திய எல்லைகளுக்கு அருகாமையில் உள்ள…

57 mins ago

‘எதுவுமே உருப்படியா அமையல’ ! தோல்விக்கு பின் புலம்பும் ஹர்திக் பாண்டியா !!

Hardik Pandya : நேற்று நடைபெற்ற மும்பை போட்டியில் எதுவுமே சரியாக அமையவில்லை என போட்டி முடிந்த பிறகு தோல்வி பெற்றதன் காரணங்களை விளக்கி கூறி இருந்தார்…

58 mins ago

முதல் பெண் மல்யுத்த வீராங்கனை ஹமிதா பானுவை கெளரவித்த கூகுள் டூடுல்.!

Wrestler Hamida Banu: இந்தியாவின் முதலாவது மல்யுத்த வீராங்கனை ஹமிதா பானுவை சிறப்பிக்கும் வகையில் கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற மல்யுத்த வீரரை பாபா பஹல்வானை 1…

1 hour ago