இந்தியா

இன்று சிறப்பான நாள்.! சுதந்திரத்துக்கு பிறகு முதன் முறையாக… பிரதமர் மோடி பெருமிதம்.!

டெல்லி: தேர்தலுக்கு பிறகு முதன் முறையாக 18வது மக்களவை கூட்டத்தொடர் இன்று புதிய நாடாளுமன்றத்தில் தொடங்கியுள்ளது. இன்றும் நாளையும், புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர். அதற்கு முன்னதாக தற்காலிக மக்களவை சபாநாயகராக பாஜக எம்பி பர்த்ருஹரி மஹ்தப்விற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அதனை அடுத்து, புதிய தற்காலிக சபாநாயகர் மற்ற உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். புதிய உறுப்பினர்கள் புதிய நாடாளுமன்ற வளாகத்திற்குள் வந்து கொண்டிருக்கும் வேளையில், நாடாளுமன்றம் செல்வதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் கூறுகையில், இன்று நமது ஜனநாயகத்தில் ஒரு புகழ்பெற்ற நாள். நாட்டின் சுதந்திரத்திற்கு பிறகு முதல் முறையாக, நமது சொந்த புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் எம்பிக்கள் பதவியேற்று கொள்கின்றனர்.  இதுவரை இந்த நிகழ்வு பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடந்தது. இந்த குறிப்பிடத்தக்க நாளில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.பி.க்களையும் நான் மனதார வரவேற்கிறேன். அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

18வது மக்களவை கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. உலகின் மிகப்பெரிய தேர்தல் மிக பிரமாண்டமாகவும், கம்பீரமாகவும் நடைபெற்று முடிந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக மக்களவைத் தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக தற்போது மாறியுள்ளது.  மூன்றாவது முறையாக நமது அரசாங்கத்திற்கு பணியாற்ற நமது நாடு மீண்டும் வாய்ப்பளித்துள்ளது.

நாட்டு மக்கள் எதிர்க்கட்சிகளிடம் இருந்து நல்ல நடவடிக்கைகளை எதிர்பார்க்கின்றனர். ஜனநாயகத்தின் மாண்பை நிலைநாட்ட எதிர்க்கட்சிகள் நாட்டின் சாமானியர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவர்கள் என நம்புகிறேன். வீண் நாடகம், அமளி நாடாளுமன்றத்தில் வேண்டாம். மக்களுக்கு நல்ல பலன்கள் தேவை, வெறும் கோஷங்கள் வேண்டாம். நாட்டிற்கு ஒரு நல்ல எதிர்க்கட்சி, பொறுப்புள்ள எதிர்க்கட்சி தேவை, இந்த 18வது மக்களவையில் வெற்றி பெற்ற எம்.பி.க்கள் சாமானியர்களின் இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முயற்சிப்பார்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

நாட்டு மக்கள் எனக்கு மூன்றாவது முறையாக ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளனர். இது மாபெரும் வெற்றி, எங்களின் பொறுப்பு மும்மடங்கு அதிகரித்தது. எனவே, மூன்றாவது பதவிக்காலத்தில், நாங்கள் மூன்று மடங்கு கடினமாக உழைத்து, மூன்று மடங்கு பலன்களை பெறுவோம் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன் என பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றினார்.

Recent Posts

மக்களே கவனம்! நாளை இந்த இடங்களில் எல்லாம் மின்தடை!!

மின்தடை  : நாளை ( ஜூலை 9 /7/2024) எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரத்தை பார்க்கலாம். வடசென்னை  மாதம்பட்டி, ஆலாந்துறை, குப்பனூர், கரடிமடை,…

9 mins ago

ஆம்ஸ்ட்ராங் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். ! இபிஎஸ் பரபரப்பு குற்றசாட்டு.!

சேலம்: பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது என இபிஎஸ் குற்றசாட்டை முன்வைத்துள்ளார். கடந்த ஜூலை 5ஆம் தேதி…

13 mins ago

என்ன நடந்தாலும் அதை மட்டும் மாற்றக்கூடாது…அபிஷேக் சர்மாவுக்கு அப்பா கூறிய அட்வைஸ்!!

அபிஷேக் சர்மா : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அபிஷேக் சர்மா இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். அதன்படி தற்போது, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக…

54 mins ago

தமிழகத்தில் இவர்கள் மட்டும் இனி கட்டணமின்றி மண் எடுக்கலாம்.!

சென்னை : பாசனத் தொட்டிகள், குளங்கள், கால்வாய்கள், ஏரிகள் போன்ற நீர் ஆதாரங்களில் இருந்து வண்டல்மன் மற்றும் களிமண் ஆகியவற்றை விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் பொதுமக்கள்…

59 mins ago

8ம் வகுப்பு போதும் ..! அரசாங்க அலுவலக உதவியாளர் வேலை உங்களுக்கு தான் ..!

வளர்ச்சித் துறை ஆட்சேர்ப்பு : தமிழக அரசின், தமிழ் வளர்ச்சித் துறை ஆட்சேர்ப்பு 2024 சார்பில் அலுவலக உதவியாளர், துப்புரவாளர் மற்றும் தோட்ட துப்புரவாளர் போன்ற பணிகளுக்கு…

1 hour ago

பிரதமர் மோடியின் ரஷ்ய பயணம்.! முக்கிய விவரங்கள் இதோ…

டெல்லி: 3 நாள் பயணமாக ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இன்று பிற்பகல் ரஷ்யா சென்றடைய உள்ளார். பிரதமர் மோடி இன்று…

1 hour ago