பிரதமர் மோடி ஒரு பாசாங்குக்காரர்..! காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடும் விமர்சனம்..!

பிரதமர் மோடி ஒரு பாசாங்குக்காரர் என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்ச்சித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்வதற்காக நேற்று ஜப்பான் புறப்பட்டுச் சென்றார். ஜப்பான் ஹிரோஷிமாவில் ஜி-7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்ற பிரதமர் மோடி இன்று ஹிரோஷிமாவில் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாயாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மேலும், ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஹிரோஷிமா சென்றுள்ள பிரதமர் மோடி அகிம்சையால் மட்டுமே உலகைக் காப்பாற்ற முடியும் என்று நம்பிய மகாத்மா காந்தியின் சிலையை திறந்து வைத்துள்ளார். இந்நிலையில், பிரதமர் மோடி ஜப்பானில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்துவைத்ததை காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

ஜெய்ராம் ரமேஷ் அதிகபட்ச பாசாங்குத்தனம், குறைந்தபட்ச நேர்மை என்பது இவரின் (மோடி) தனிச்சிறப்பு என்று கூறியுள்ளார். மேலும், ஹிரோஷிமாவில் காந்தியின் மார்பளவு சிலையைத் திறந்து வைத்த பிரதமர் 8 நாட்களுக்குப் பிறகு, காந்தியை தனது வாழ்நாள் முழுவதும் கடுமையாக எதிர்த்த சாவர்க்கரின் பிறந்தநாளில் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை திறந்து வைக்கிறார். என்று விமர்சித்துள்ளார்.