5 முதல் 11 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு ஃபைசர் கொரோனா தடுப்பூசி – எஃப்டிஏ அனுமதி..!

5 முதல் 11 வயது வரையுள்ள குழந்தைகளுக்கான ஃபைசரின் லோ-டோஸ் ஜப் தடுப்பூசி மருந்தை எஃப்டிஏ அங்கீகரித்துள்ளது.

மில்லியன் கணக்கான பெற்றோருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஃபைசர் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

சமீபத்தில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருத்துவ துறைக்கு ஃபைசர் நிறுவனம் அனுப்பிய விண்ணப்பத்தில்,இதுவரை  5 – 11 வயதுக்கு உட்பட்ட 2,000 க்கும் அதிகமான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளதாகவும்,குழந்தைகளுக்கு இதுவரை எந்தவிதமான பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை எனவும்,அதனால் 5 – 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அமெரிக்க அரசு தங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தது.

இந்நிலையில்,5 முதல் 11 வயது வரையுள்ள குழந்தைகளுக்கான ஃபைசரின் லோ-டோஸ் ஜப் கொரோனா தடுப்பூசியை எஃப்டிஏ அங்கீகரித்துள்ளது.

குழந்தைகளுக்கான தடுப்பூசி அளவு:

குழந்தைகளுக்கான டோஸ்களை – டீன் ஏஜ் மற்றும் பெரியவர்களுக்கு வழங்கப்படும் தொகையில் மூன்றில் ஒரு பங்கு செலுத்த அவசரகால பயன்பாட்டிற்காக எஃப்டிஏவால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் தடுப்பூசியைப் பெறத் தொடங்கும் முன், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் நோய்த்தடுப்பு ஆலோசனைக் குழு கூடி, யார் அதைப் பெற வேண்டும் மற்றும் அதை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்து மேலும் குறிப்பிட்ட பரிந்துரைகளைச் செய்ய கூடும். குழு தற்போது நவம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் கூட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதனையடுத்து,நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் நோய்த்தடுப்பு ஆலோசனைக் குழு(CDC) அதன் முடிவை வெளியிட்டதும், தகுதியான குழந்தைகளுக்கு மூன்று வார இடைவெளியில் இரண்டு ஷாட்கள் போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,நவம்பர் மாதம் முதல் ஏறத்தாழ 28 மில்லியன் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Recent Posts

இன்று எலிமினேட்டர்..! முதலாவதாக வெளியேற போவது எந்த அணி ?

சென்னை : ஐபிஎல் தொடரின் இன்றைய எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியும், பெங்களூரு அணியும் மோதுகிறது. ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிபயர் -1 போட்டியில் கொல்கத்தா…

35 mins ago

IPL2024: ஹைதராபாத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற கொல்கத்தா..!

IPL2024: கொல்கத்தா அணி 13.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 8 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல்…

9 hours ago

லைசன்ஸ் பெற இனி RTO ஆபீஸுக்கு செல்ல வேண்டாம்.. ஜூன் 1 முதல் புதிய விதி அறிமுகம்.!

சென்னை: ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான புதிய விதிமுறைகளை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போதயை நடைமுறையின்படி, ஒரு தனிநபர் ஒட்டுநர் உரிமம் பெற வேண்டும்…

13 hours ago

‘நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன்’ – பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் தெரிவிக்கும் ஹர்பஜன் சிங்!

சென்னை : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயலாற்ற, இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தற்போது அளித்த பேட்டி ஒன்றில் விருப்பம்…

13 hours ago

படையப்பா படத்தை ரீ-ரிலீஸ் பண்ணனும்! பலே திட்டம் போட்ட ரஜினிகாந்த் !

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் படையப்பா படத்தை ரீ-ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமாவில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கின்ற விஷயங்களில் ஒன்று என்னவென்றால் பழைய…

13 hours ago

அடுத்த டார்கெட் கோப்பா அமெரிக்கா தான் !! மெஸ்ஸி ரசிகர்களுக்கு குட் நியூஸ் ..!

சென்னை : வருகிற ஜூன் மாதம் தொடங்கவுள்ள கோப்பா அமெரிக்கா தொடரிலும் அதற்கு முன் அர்ஜென்டினா அணி விளையாடவுள்ள நட்புரீதியான போட்டிகளிலும் (Friendly Match) லியோனல் மெஸ்ஸி…

14 hours ago