தமிழ்நாடு

சட்டசபைக்கு ‘நோ’.! கள்ளக்குறிச்சிக்கு விரைந்த எடப்பாடி பழனிச்சாமி.!

கள்ளக்குறிச்சி: மக்களவை தேர்தலுக்கு பின்பு இன்று கூடும் தமிழக சட்டப்பேரவைக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செல்லவில்லை. அவர் கள்ளக்குறிச்சிக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரை அடுத்து, தற்போது துறை ரீதியிலான கோரிக்கைகள் மற்றும் விவாதத்திற்காக தமிழக சட்டப்பேரவை இன்று (ஜூன் 20) கூடுகிறது. இந்த கூட்டத்தொடர் வரும் 29ஆம் தேதி வரையில் காலை – மாலை என இரு வேளைகளிலும் விவாதங்கள் நடைபெற உள்ளது.

இப்படியான சூழலில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் பூதாகரமாக மாறி வருகிறது. இதுவரை கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 33ஐ தாண்டியுள்ளது. மேலும் சுமார் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயருமோ என்ற அச்சம் நிலவி வருகிறது.

இப்படியான சூழலில் எதிர்க்கட்சி தலைவராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி தமிழக சட்டப்பேரவைக்கு செல்வதை தவிர்த்து தற்போது கள்ளக்குறிச்சி விரைந்துள்ளார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களவை நேரில் சந்தித்து பேச உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக அமைச்சர்கள் ஏ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் கள்ளக்குறிச்சிக்கு நேற்று வந்திருந்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றனர். இதனை அடுத்து இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கள்ளக்குறிச்சி வர உள்ளார் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

Recent Posts

ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும்.! சென்னை புதிய கமிஷனர் அருண் அதிரடி.!

சென்னை: ரவுடிகளுக்கு அவர்கள் புரியும் மொழியில் நடவடிக்கை எடுப்போம். ரவுடிகளை ஒடுக்குவோம். - சென்னை மாநகர காவல் ஆணையர் அருண். சென்னை மாநகரின் புதிய காவல் ஆணையராக…

2 mins ago

யானைகள் ஒன்றையொன்று பெயர் சொல்லி கூப்பிடுமா? புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

ஆய்வு : மனிதர்களைப் போலவே யானைகளும் மற்ற யானைகளை பெயர் சொல்லி அழைப்பதாக கென்ய நாட்டின் ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. மனிதர்கள் நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு பெயரை…

21 mins ago

கமல்ஹாசன் கூட ஒரு படம் தான் எடுக்க முடியும்.! நழுவிய இயக்குனர்கள்..?

கமல்ஹாசன் : உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பதை தாண்டி கதை, திரைக்கதை வசனம்  மற்றும் இயக்கம்  என பல விஷயங்களில் நன்கு அறிந்தவராக இருக்கிறார். இயக்குனராக அவர் ஹே ரேம்,…

25 mins ago

என் படத்திற்கு நானே வரி விலக்கு அளிக்கிறேன் – பார்த்திபன் செய்த செயல்..எகிறும் ‘டீன்ஸ்’ எதிர்பார்ப்பு!!

டீன்ஸ் : இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் அடுத்ததாக 'டீன்ஸ்' என்ற திரைப்படத்தினை இயக்கி அதில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். வித்தியாச வித்தியாசமான படங்களை இயக்கி மக்களை கவர்ந்து…

1 hour ago

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் வெற்றி.! ஆட்சியை தக்கவைத்த I.N.D.I.A கூட்டணி.!

ஜார்கண்ட்: சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் I.N.D.I.A கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றார். ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரியில்…

2 hours ago

பிசிசிஐ அளித்த ரூ.125 கோடி பரிசு தொகை ..! யார் யாருக்கு எவ்வளவு தெரியுமா ..?

பிசிசிஐ : நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு பிசிசிஐ பரிசுத்தொகையாக ரூ.125 கோடிக்கு அளித்துள்ளனர். அதனை இந்திய வீரர்கள் எப்படி பிரித்துக்கொள்வார்கள் என்பதை…

2 hours ago