ஆன்லைன் கேமிங்கில் ஈடுபடுபவர்களே உஷார்! இந்திய சைபர் கிரைம் எச்சரிக்கை!

ஆன்லைன் கேமிங்கில் ஈடுபடும் போது பாதுகாப்பாக செயல்படுமாறு மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மை காலமாக ஆன்லைன் கேமிங் பயன்பாடுகள் மூலம் மோசடிகள் அதிகரித்து வருகிறது. ஆன்லைன் கேமிங் விளையாடுபவர்கள் தவறான முறையில் கையாளுதல், தகவல் பரிமாற்றம் மற்றும் பாதுகாப்பற்றை ஆப்ஸ்களை பயன்படுத்துவதால் நிதி மோசடியில் சிக்கிக்கொள்கின்றனர்.

இதுபோன்று ஆன்லைன் கேமிங்கில் கவன குறைவால் பலர் தங்களது பணத்தினை இழந்துள்ள செய்திகள் நிறைய உள்ளது. இதனால், கேமிங் பயன்பாடுகள் மூலம் மோசடிகளை தடுப்பதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஆன்லைன் கேமிங்கில் ஈடுபடும் போது பாதுகாப்பாக செயல்படுமாறு மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் கிரைம் பிரிவு எச்சரித்துள்ளது.

வாட்ஸ்அப் சேனல் வச்சிருக்கீங்களா? உங்களுக்காகவே சூப்பர் அப்டேட்ஸ் இதோ!

இதுதொடர்பாக இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் கூறியதாவது, ஆன்லைனில் கேமிங் விளையாடும்போது, புத்திசாலித்தனமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோர் மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் போன்ற உண்மையான ஆதாரங்களில் இருக்கும் இடங்களில் இருந்து மட்டுமே ஆன்லைன் பயன்பாடுகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

எப்பொழுதும் பதிவிறக்கம் செய்யும்போது கேம் ஆப் வெளியீட்டாளர்களின் தகவலை சரிபார்த்து, இணையதளத்தின் சட்டபூர்வமான தன்மையை உறுதிப்படுத்தவும் வேண்டும். கேம்-இன்-ஆப் பர்ச்சேஸ் மற்றும் சலுகைகளின் வலையில் ஒருபோதும் விழக்கூடாது. தனிப்பட்ட தகவல்களைப் பகிரும்போது பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஏனென்றால், மோசடியில் ஈடுபடுபவர்கள், கேமிங் பிளேயர்களை கையாள சமூக ஊடக தந்திரங்களைப் பயன்படுத்தலாம்.

ஆப்ஸைப் பதிவிறக்கும் போது தொடர்புடைய மற்றும் தேவையான அனுமதிகளை மட்டும் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஆன்லைன் கேமிங் கில் ஈடுபடுவர்களிடம் இருந்து, கேமிங் தளங்கள் ப்ராக்ஸி வங்கிக் கணக்குகள் மூலம் UPI கட்டணங்களை சேகரித்து வருகின்றன, ப்ராக்ஸி கணக்குகளில் திரட்டப்பட்ட தொகை ஹவாலா, கிரிப்டோ மற்றும் பிற சட்டவிரோத வழிகள் மூலம் அனுப்பப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

அடடா! வாட்ஸ்அப்பில் புளூடூத்தை பயன்படுத்தி 2GB வரை ஷேர் செய்யலாம்!

ஆன்லைன் மோசடி ஏற்பட்டால், சைபர் கிரைம் ஹெல்ப்லைன் எண்ணான 1930-ஐ டயல் செய்யலாம் எனவும்அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கூறியதாவது, கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி வரை மொத்தம் 581 ஆப்ஸ்களை மத்திய அரசு முடக்கியது. இவற்றில் 174 பெட்டிங் மற்றும் சூதாட்ட ஆப்ஸ்,  87 லோன் லென்டிங் ஆப்ஸ் இருந்தன. இந்த ஆப்ஸ் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் (MeitY) தடுக்கப்பட்டது.

இந்த கேமிங் பயன்பாடுகளில் PUBG, GArena Free Fire ஆகியவை அடங்கும். கடந்த ஆண்டு ஜூலை மாதம், ஐஜிஎஸ்டி சட்டத்தை மத்திய அரசு திருத்தியது, இது அனைத்து ஆஃப்ஷோர் கேமிங் நிறுவனங்களும் இந்தியாவில் பதிவு செய்யப்படுவதை கட்டாயமாக்கியது. மேலும், பதிவு செய்யப்படாத மற்றும் சட்டங்களை மீறும் இணையதளங்களை முடக்கும் அதிகாரத்தையும் இந்த சட்டம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.