OnePlus Open: அறிவிப்பு வந்துருச்சி..இந்த தேதியில்தான் வெளியீடு.! ஒன்பிளஸின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்.!

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் புதிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் ஓபன்-ஐ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்துவதை உறுதிசெய்து, அதன் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக டீஸர் படம் மற்றும் அறிமுகம் குறித்த உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் மட்டுமே வந்த நிலையில் தற்பொழுது ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

அதன்படி, அக்டோபர் 19ம் தேதி இந்த ஸ்மார்ட்போன் ஆனது இந்தியா உட்பட உலகளவில் உள்ள சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படும் என ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது. தற்போது வரை சந்தைகளில் பிரபலமாக இருக்கும் சாம்சங்கின்  கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5 ஸ்மார்ட்போனுக்குப் போட்டியாக இந்த ஒன்பிளஸ் ஓபன் ஆனது இந்தியாவில் களமிறங்கவுள்ளது.

டிஸ்பிளே

ஒன்பிளஸ் ஓபன் ஸ்மார்ட்போன் ஆனது 2268×2440 பிக்சல் ஹைரெசல்யூஷன் கொண்ட 7.8 இன்ச் அளவுள்ள க்யூஎச்டி பிளஸ் அமோலெட் மெயின் டிஸ்ப்ளேவுடன் வரலாம். அதோடு வெளிப்புறம் 1116×2484 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்ட 6.3 அளவுடைய எஃப்எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளேவுடன் வரும் என்று கூறப்படுகிறது.

இந்த இரண்டு டிஸ்ப்ளேவும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் படங்கள் பார்க்கும்போது கூட உங்களுக்கு சிறப்பான அனுபவம் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் மூடிய நிலையில் இருக்கும்போது, மெயின் மற்றும் கவர் டிஸ்பிளே ஆகிய இரண்டிற்கும் எந்த இடைவெளியும் இருக்காது என கூறப்படுகிறது.

பிராசஸர்

ஒன்பிளஸ் ஓபன் ஸ்மார்ட்போனில் அட்ரினோ ஜிபியு உடன் இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் ஆனது பொருத்தப்படலாம். ஆண்ட்ராய்டு 13 அல்லது புதிய ஆண்ட்ராய்டு 14 மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனில் நிறுவனத்தின் சொந்த ஆக்ஸிஜன் ஓஎஸ் 13.1 உள்ளது. இந்த பிராஸசர் மூலம் அதிக அளவிலான கிராஃபிக்ஸ் கொண்ட கேம்களைத் தடங்கள் இல்லாமல் விளையாட முடியும்.

கேமரா

இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனுடன் கூடிய 48 எம்பி மெயின் கேமரா, 48 எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 64 எம்பி டெலிஃபோட்டோ கேமரா ஆகியவற்றைக் கொண்ட வட்ட வடிவ ட்ரிப்பில் ரியர் கேமரா அமைப்பு உள்ளதாக கூறப்படுகிறது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 32 எம்பி கேமரா பொருத்தப்படலாம்.

பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனை அதிக நேரம் பயன்படுத்துவதற்கு 4,805 mAh திறன் கொண்ட லித்தியம் பாலிமர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்ய 100 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதனால் ஒன்பிளஸ் ஓபன் ஸ்மார்ட்போன் பேட்டரியை 100 சதவீதம் சார்ஜ் செய்ய 20 முதல் 30 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்று கூறப்படுகிறது.

ஸ்டோரேஜ்  மற்றும் விலை

ஒன்பிளஸ் ஓபன் எமரால்டு எக்லிப்ஸ் மற்றும் வோயேஜ் பிளாக் ஆகிய இரண்டு வண்ணங்களில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 12 ஜிபி மற்றும் 16 ஜிபி ரேம், 1 டிபி வரையிலான இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கலாம். ஒன்பிளஸ் ஓபன் இந்தியாவில் ரூ.1,10,000 முதல் ரூ.1,41,490 என்ற விலையில் விற்பனைக்கு வரலாம். இது சாம்சங் கேலக்சி இசட் ஃபோல்ட் 5 ஐ விட அதிகமாக இருக்கலாம். இசட் ஃபோல்ட் 5 ஆனது ரூ.1,20,000 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

வெளியீடு:

ஒன்பிளஸ் ஓபன் ஆனது அக்டோபர் இரண்டாம் பாதியில், அதாவது அக்டோபர் 19ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்று முன்னர் சில தகவல்கள் வெளிவந்தது. இந்த நிலையில், தற்போது அதனை உறுதிப்படுத்தி, அக்-19 அன்று இரவு 7.30 மணிக்கு மும்பையில் நடைபெறும் நிகழ்வில் உலகளவில் வெளியிடப்போவதாக ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது. இந்த ஒன்பிளஸ் ஓபன் ஆனது ஒன்பிளஸ் மற்றும் ஒப்போ இணைந்து உருவாக்குவதாக கூறப்படுகிறது.