உமர் காலித்தை அக்டோபர் 22 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு..!

முன்னாள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் உமர் காலித்திற்கு அக்டோபர் 22 வரை நீதிமன்ற காவல்  நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பிப்ரவரியில், வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரத்தின் பின்னணியில் சதித்திட்டத்தின் அம்சம் குறித்து விசாரிக்க எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்த 200 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குடியுரிமை சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்பாளர்களுக்கும் இடையிலான வன்முறை மோதல்களில்  53 பேர் உயிரிழந்தனர்,  200 பேர் காயமடைந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு டெல்லி வன்முறையில் பங்கு வகித்ததாகக் கைது செய்யப்பட்ட ஜே.என்.யு முன்னாள் மாணவர் உமர் காலித்தை  கடந்த செப்டம்பர் 13 ம் தேதி டெல்லி போலீஸ் பத்து மணி நேரம் விசாரித்த பின்னர் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு காலித்தை கைது செய்தது.

அடுத்த நாள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நீதிமன்றம் காலித்தை  10 நாட்கள் டெல்லி காவல்துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. இந்நிலையில், இன்றுடன் காவல்துறை  காவல் அவகாசம் முடிந்த நிலையில்,  உமர் காலித்தை வருகின்ற அக்டோபர் 22 வரை நீதிமன்ற காவல் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

murugan
Tags: Umar Khalid

Recent Posts

பரவும் பறவை காய்ச்சல்… கண்காணிக்கும் மத்திய சுகாதாரத்துறை.!

Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…

14 mins ago

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!

Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…

24 mins ago

விடுமுறையில் செம கலெக்ஷன்! வசூலில் மிரட்டி விட்ட ரத்னம்!

Rathnam : விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் திரைப்படம் உலகம் முழுவதும் 11 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால்  நடிப்பில்…

50 mins ago

‘கோட்’ படத்தில் சிஎஸ்கே வீரர்கள்? உண்மையை உடைத்த அஜ்மல் !!

Ajmal Ameer : விஜய் நடித்து கொண்டிருக்கும் 'தி கோட்' படத்தில் சிஎஸ்கே வீரர்கள் நடித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நடிகர் விஜய் நடித்து வரும் படமான 'தி கோட்'…

58 mins ago

மணிப்பூர் பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்… CBI அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்…

Manipur Violence : மணிப்பூரில் ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இரு பெண்கள் குறித்தும், அங்கு நேர்ந்த சம்பவங்கள் குறித்தும் CBI அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த…

1 hour ago

கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்க விளைவா? வெளியான அதிர்ச்சி தகவல்!

Covishield: கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாகவே பக்க விளைவுகள் ஏற்படலாம் என அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பின்னர்…

1 hour ago