#Breaking : நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்க தேவையில்லை -உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு

நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்க தேவையில்லை என்று  சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது.இதற்கு இடையில் தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அவரது அறிக்கையில்,நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்கியது.கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழக்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது” என்று கூறியிருந்தார்.சூர்யாவின் கருத்துக்கு ஆதரவாகவும் ,எதிராகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

எனவே நீதிமன்ற நடவடிக்கையை விமர்சித்த நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, நீதிபதி சுப்பிரமணியம் கடிதம் எழுதினார்.இதன் பின் நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு முன்னாள் நீதிபதிகள் 6 பேர் கடிதம் எழுதினர்.முன்னாள் நீதிபதிகளான சந்துரு ,பாஷா ,சுதந்திரம்,கண்ணன்,ஹரிபரந்தாமன் ,அக்பர் உள்ளிட்டோர் கடிதம் எழுதினார்கள். அந்த கடிதத்தில்,சூர்யாவின் அறக்கட்டளை மூலமாக நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்கள் உயர் கல்வி முடித்து நல்ல வேலைவாய்ப்பை பெற்றுள்ள நிலையில், சூர்யா மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பெருந்தன்மையாக விட்டுவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்   நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்க தேவையில்லை என்று  சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.மேலும் நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியத்தின் கோரிக்கையை நிராகரித்தது தலைமை நீதிபதி அமர்வு.

Recent Posts

வெயிலில் மயங்கிய சிறுவர்கள்.. தோல்வியில் உலக சாதனை நடன நிகழ்ச்சி.. வருந்திய பிரபு தேவா.!

Prabhu Deva Performance: உச்சி வெயிலில் காத்து கிடந்தும் கடைசி நிமிடத்தில் வராத பிரபுதேவா வருத்தம் தெரிவித்து வீடியோ கால் செய்த வளம். சர்வதேச நடனத் தினத்தை…

26 mins ago

கில்லியை மிஞ்சியதா தீனா? ரீ-ரிலீஸில் செய்த வசூல் விவரம் இதோ!

Dheena Re Release : ரீ -ரிலீஸ் ஆன தீனா படம் இதற்கு முன்பு வெளியான கில்லி படத்தின் முதல் நாள் வசூலா முறியடித்துள்ளதா என்பதை பார்க்கலாம்.…

39 mins ago

‘ஏமாற்றம் தான் மிச்சம்’ – மனம் உடைந்த ரிங்கு சிங் குடும்பத்தினர்..!

Rinku Singh : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் முதன்மை அணியில் இடம்பெறாமல், ரிசர்வ் வீரராக தேர்வு…

39 mins ago

ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளே… இன்று மாலை முக்கிய அப்டேட்.!

EPass : ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளுக்கு பிரத்யேக இ பாஸ் வழங்க இன்று வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கோடைகாலம் ஆரம்பித்து வெயில் மக்களை வாட்டி வதைத்து…

58 mins ago

விருதுநகர் வெடிவிபத்து – FIRஇல் வெளியான திடுக்கிடும் தகவல்கள்.!

Virudhunagar : வெடிமருந்து வேன்களை அருகருகே வைத்து, வெடிமருந்துகளை இறக்கியதே விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் நடந்த வெடிவிபத்தில் 3…

1 hour ago

வீடு.. எருமை.. தாலி.., விரக்தியின் விளிம்பில் மோடி.! ராகுல் காந்தி காட்டம்.!

Rahul Gandhi : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் தோல்வியின் விளிம்பில் இருக்கிறார் பிரதமர் மோடி என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். மக்களவை தேர்தல் இரண்டு கட்டங்கள்…

2 hours ago