Live : அதிபர் டிரம்ப்பின் அடுத்தடுத்த அதிரடி முதல்… ஈரோடு கிழக்கு தேர்தல் களம் வரை…
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அடுத்தடுத்த அதிரடி முடிவுகள் முதல் ஈரோடு கிழக்கு தொகுதி அரசியல் நகர்வுகள் வரை பல்வேறு தகவல்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம்....
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், நேற்று இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலை தேர்தல் நடத்தும் அதிகாரி மணீஷ் வெளியிட்டுள்ளார். திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார், நாதக சார்பில் சீதாலட்சுமி உட்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
அமெரிக்காவின் 47வது அதிபராகவும், 2வது முறையாகவும் நேற்று வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றார். துணை அதிபராக ஜே.டி.வான்ஸ் பதவி ஏற்றார். இதனை அடுத்து இருபாலின கொள்கை, சட்டவிரோத குடியேற்றம் தடுப்பு நடவடிக்கைகள், பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற்றம் என அடுத்தடுத்த அதிரடி முடிவுகளுக்கு டிரம்ப் கையெழுத்திட்டு வருகிறார்.