சர்வதேச செஸ் ஒலிம்பியாட்:10 கோடி நிதி ஒதுக்கீடு – தமிழக அரசு அறிவிப்பு!

Default Image

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு ரூ.10 கோடி நிதி விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.

சென்னை அருகே மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆக.10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக ஏற்கனவே தமிழக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.இதனைத் தொடர்ந்து,முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது.இதில், பொதுத்துறை அமைச்சர்,விளையாட்டுத்துறை அமைச்சர், சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 23 பேர் இடம் பெற்றுள்ளனர்.

அதன்பின்னர்,சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.இதனிடையே,சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் 20 பேர் கொண்ட இந்திய அணியை அகில இந்திய செஸ் கூட்டமைப்பு சமீபத்தில் அறிவித்திருந்தது.இந்திய அணியின் ஆலோசராக கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டது. போட்டியை நடத்தும் இந்தியா,முதன்முறையாக ஓபன் பிரிவு மற்றும் பெண்கள் பிரிவில் தலா 2 அணிகளை களமிறக்குகிறது.

இதனையடுத்து,செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி முடிக்க ரூ.92 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. மேலும்,மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் தொடரின் துவக்க,நிறைவு விழாவிற்கு ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.ஆனால், செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த கூடுதலாக ரூ.15 கோடி தர அரசிடம் இந்திய செஸ் கூட்டமைப்பு கோரிக்கை வைத்தது.

இந்நிலையில்,மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு மேலும் ரூ.10 கோடி நிதி விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.குறிப்பாக,போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கான முழு செலவையும் தமிழக அரசே ஏற்பதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்