அடுத்த நாட்டிற்கு செல்ல இவர் வீட்டு படுக்கைஅறை சென்றால் போதும்.! நாகலாந்து அமைச்சர் ருசிகரம்.!
இந்தியா – மியான்மர் என இரு நாட்டு எல்லையிலும் ஒருவரது வீடு அமைந்துள்ளது என நாகலாந்து அமைச்சர் டிவிட்டர் பகுதியில் பதிவிட்டுள்ளார்.
நாகாலாந்து மாநிலத்தின் உயர்கல்வி மற்றும் பழங்குடியினர் விவகாரதுறை அமைச்சர் டெம்ஜென் இம்னா ஆலோங் தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று சூப்பரான தகவலை பகிர்ந்து கொண்டார்.
அதாவது, நாகலாந்தில், இந்தியா – மியான்மர் நாட்டு எல்லையில் இந்தியாவில் பாதியாகவும், மியான்மரில் மீதி பாதியாகவும் இருக்கும் ஒரு வீட்டின் வீடியோவை நாகலாந்து அமைச்சர் பகிர்ந்துள்ளார்.
மேலும் அதில் குறிப்பிடுகையில், ‘ இரு நாட்டு எல்லையை கடக்க, இந்த நபர் தனது படுக்கையறைக்கு சென்றால் போதும். இங்குள்ளவர்கள் மட்டும் இந்தியாவில் தூங்கி மியான்மரில் சாப்பிடுகிறார்கள். என்றும் கலகலப்பாக பதிவிட்டு அந்த விடீயோவையும் டிவிட்டர் பதிவிட்டுள்ளார்.
OMG | यह मेरा इंडिया
To cross the border, this person just needs to go to his bedroom.
बिलकुल ही “Sleeping in India and Eating in Myanmar” वाला दृश्य????
@incredibleindia
@HISTORY
@anandmahindra pic.twitter.com/4OnohxKUWO— Temjen Imna Along (@AlongImna) January 11, 2023