புதிய தலைப்பு.. புதிய ஹீரோ.?? தனுஷின் “நானே வருவேன்” புதிய அப்டேட்..!!

தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள நானே வருவேன் படத்தின் தலைப்பு ராயன் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்.

இயக்குனர் செல்வராகவன் மற்றும் தனுஷ் இருவரும் 10 ஆண்டுகளுக்கு பிறகு நானே வருவேன் படத்தில் இணையவுள்ளனர். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் தேதி வெளியானது.

படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தற்போது படத்தின் டைட்டில் மற்றும் கதையை இயக்குனர் செல்வராகவன் மாற்ற முடிவு செய்துள்ளதாகவும், படத்திற்கு ராயன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு ராயபுரத்தில் எடுக்கப்படவுள்ளதாகவும், படம் அண்ணன் தம்பி  கதையை கொண்டதாகவும், இந்த படத்தில் தனுஷிற்கு தம்பியாக நடிகர் விஷ்ணு விஷால் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Recent Posts

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

5 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

10 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

10 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

10 hours ago

உருவாகிறது பயோபிக்! அண்ணாமலையாக நடிக்கும் விஷால்?

Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…

10 hours ago

கொளுத்தும் வெயிலில்.. இந்த 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!

Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…

11 hours ago