Nepal T20I : அடுத்த டிவில்லியர்ஸ் இவரா ? அதிவேக சதம் அடித்து நமீபியா வீரர் சாதனை ..!

Nepal T20I Tri-Series 2024 : நேபாளத்தில் இன்று (27-02-2024) தொங்கிய முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் நேபாளம், நெதர்லாந்து, நமீபியா அணிகள் மோதி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியாக இன்று நமீபியா அணியும் நேபாள அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. களமிறங்கிய நமீபியா அணியின் தொடக்க வீரர் மைக்கேல் வான் லிங்கன் 20 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி யமற்றம் அளித்தார்.

Read More :-  நீங்க கொஞ்சம் விஸ்வாசமா இருங்க ..கேப்டன் ரோஹித் சொல்வது சரிதான் – சுனில் காவஸ்கர்

அதன் பின், களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்கள். பின் 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய நமீபியா வீரரான லோஃப்டி-ஈடன் நேபாள வீரர்களின் பந்து வீச்சை பறக்க விட்டார். அவர் 18 பந்துகளில் அரை சதம் பூர்த்தி செய்து அசத்தினார். அப்போது, நமீபியா அணி 15.3 ஓவருக்கு 140 ரன்கள் எடுத்து இருந்தது. அரை சதம் விளாசிய பிறகு அவரது ஆட்டம் மேலும் ஆக்ரோஷமாக இருந்தது.

அதை தொடர்ந்து, அடுத்த 15 பந்துகளில் அவரது அதிவேக சதத்தை பூர்த்தி செய்த்து சாதனை படைத்தார். இதனால், வெறும் 33 பந்துகளில் 100 ரன்களை எடுத்து அசத்தினார். இதில், 11 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும். மேலும், லோஃப்டி-ஈடன் 101 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் நமீபியா அணி 20 ஓவருக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்தது. இறுதியில், இந்த போட்டியை நமீபியா அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Read More :- இனிமேல் இதுதான் சம்பளம் ..! இஷான் – ஷ்ரேயஷால் இளம் வீரர்கள் உற்சாகம் ..!

இந்த சதத்தின் மூலம் சர்வதேச டி20I போட்டிகளில் மிகவும் குறைவான பந்தில் சதம் அடித்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் லோஃப்டி-ஈடன். இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் அதே நேபாள அணியை சேர்ந்த குஷால் மல்லா, கடந்த 2023-ம் வருடம் மங்கோலியா அணியுடன் வெறும் 34 பந்துகளில் சதம் அடித்திருக்கிறார்.

டி20I போட்டிகளில் அதிவேக சதம் அடித்தவர்களின் பட்டியல் :

  • லோஃப்டி-ஈடன் (நேபாள்) – 33 பந்துகள்
  • குஷால் மல்லா (நேபாள்) – 34 பந்துகள்
  • டேவிட் மில்லர் (தென் ஆப்பிரிக்கா) – 35 பந்துகள்
  • ரோஹித் சர்மா (இந்தியா) – 35 பந்துகள்
  • எஸ் விக்கிரமசேகர (செக் ரிபப்லிக் ) – 35 பந்துகள்

Leave a Comment