43 வருட பந்தம்! தந்தை-தாய் குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் எமோஷனல்!

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் அன்புடன் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருந்த சமயத்திலே அதாவது கடந்த 1981 ஆம் ஆண்டு லதா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என்ற இரு மகள்கள் உள்ளனர். இவரது மகள்கள் மூலம் ரஜினிகாந்திற்கு நான்கு பேரக்குழந்தைகள் உள்ளனர்.

READ MORE – நீருக்கடியில் முத்தக்காட்சி…15 நாள் வேதனை- தன்வி நேகி!

இந்நிலையில், ரஜினிகாந்த் திருமணம் செய்து நேற்று 43 ஆண்டுகள் நிறைவடைந்தது தொடர்ந்து ரசிகர்கள் அவருக்கு தங்களுடைய திருமண நாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். அந்த வகையில், ரசிகர்களை தொடர்ந்து இயக்குனரும், ரஜினிகாந்தின் மகளுமான சௌந்தர்யா தனது தந்தை- தாய்க்கு எமோஷனாக தனது திருமணநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

READ MORE- சமந்தாவுக்கு இப்படி ஒரு நிலைமையா.? 72 வயது அழகனுக்கு ஜோடியாக புதியப்படம்…

இது குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தனது அம்மா அப்பாவின் புகைப்படத்தை வெளியீட்டு ” 43 வருட ஒற்றுமை என் செல்லம் அம்மாவும் அப்பாவும் .. எப்பொழுதும் ஒருவரோடொருவர் தாங்கி நிற்கும் அம்மா அப்பா. இவர்கள் இருவரும்  43 ஆண்டுகளுக்கு முன்பு,  பரிமாறிக்கொண்ட செயின்  மற்றும் மோதிரங்களை அப்பாவை அன்புடன் அணியச் செய்கிறார்கள்.

READ MORE- ஏப்ரல் மாசம் தமிழ் சினிமா சம்பவம் தான்! வரிசை கட்டி நிற்கும் திரைப்படங்கள்?

இந்த அழகான தருணத்தை பார்க்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் எப்போதுமே  உங்கள் இருவரையும் அதிகமாக நேசிக்கிறேன்” என சற்று எமோஷனலாக சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார். அவருடைய இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment