நீருக்கடியில் முத்தக்காட்சி…15 நாள் வேதனை- தன்வி நேகி!

இயக்குனர் வி.யசஸ்வி இயக்கத்தில் தீபக் சரோஜ் , தன்வி நேகி, ஆனந்த், கல்யாணி நடராஜன், மேத்யூ வர்கீஸ், நந்தினி மற்றும் கீர்த்தனா உள்ளிட்ட பலருடைய நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘சித்தார்த் ராய்’. இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

READ MORE- குவியும் பட வாய்ப்பு! குஷியில் கார் வாங்கிய பிரியாமணி…விலையை கேட்ட ஆடி போயிடுவீங்க !

படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகமாக்கி வைத்து இருந்தது. படமும் எதிர்பார்த்த அளவிற்கு இருந்த காரணத்தால் படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் படத்திற்கு நல்ல ஓப்பனிங்கை பெற்று வருகிறது. இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் படத்தில் ஹீரோயினாக நடித்து இருக்கும் தன்வி நேகி கலந்து கொண்டார்.

READ MORE- சமந்தாவுக்கு இப்படி ஒரு நிலைமையா.? 72 வயது அழகனுக்கு ஜோடியாக புதியப்படம்…

கலந்து கொண்டு இந்த ‘சித்தார்த் ராய்’ படத்தில் நடிக்கும் போது பட்ட சிரமங்களை தன்வி நேகி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ‘ படத்தில் தண்ணீருக்கு அடியில் நடிக்கும் காட்சி உள்ளது. அதுவும் சாதாரண காட்சி எல்லாம் இல்லை முத்தக்காட்சி. கடந்த டிசம்பர் மாதம் சிக்மகளூரில் உள்ள நீர்வீழ்ச்சியில் முத்தக் காட்சி படமாக்கப்பட்டது.

READ MORE- ஏப்ரல் மாசம் தமிழ் சினிமா சம்பவம் தான்! வரிசை கட்டி நிற்கும் திரைப்படங்கள்?

அந்த காட்சி எடுக்கும்போது அந்த இடத்தில 14 டிகிரி வெப்பம் இருந்தது. அந்த கடும் குளிர் என்று கூட பார்க்கலாம் காட்சி படமாக்கப்பட்டது. அந்தக் காட்சிக்குப் பிறகு எனக்கு உடம்பு சரியில்லை. நான் 15 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன். படம் பார்த்தவர்கள் முத்தக்காட்சி நன்றாக இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் அப்படி நடிப்பது அவ்வளவு எளிதல்ல ரொம்பவே வேதனையாக இருந்தது ‘ என்று தன்வி நேகி கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment