இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் ‘தளபதி 67’. விஜய் நடித்து வரும் இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் நிறுவனம் படத்தில் நடிக்கும் பிரபலங்கள் யார் யார் என்பதை அறிவித்து வருகிறார்கள். அந்த வகையில் ஏற்கனவே சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக இயக்குனர் மிஷ்கின் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தில் இணைவது குறித்து பேசிய மிஷ்கின் ” 21 வருடங்களுக்கு முன்பு நான் விஜய் படத்துக்கு இணை இயக்குநராகப் பணிபுரிந்தேன். இத்தனை ஆண்டுகளில் மாறாத ஒன்று, நாம் பகிர்ந்து கொள்ளும் பந்தம். லோகேஷ் மற்றும் எனக்கு இடையே உள்ள பரஸ்பர அன்பு மற்றும் மரியாதையின் காரணமாக இது என்னை மேலும் மேலும் குறிப்பாக உற்சாகப்படுத்துகிறது. தளபதி 67 உடன் உங்கள் அனைவரையும் திரையரங்குகளில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” என கூறியுள்ளதாக போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இயக்குனர் மிஷ்கின் விஜய்யுடன் யூத் படத்தில் பணிபுரிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…