முட்டையின் வெள்ளை கரு சாப்பிடுவதால் கிடைக்கும் 5 நன்மைகள் அறியலாம் வாருங்கள் ….!

முட்டை சாதாரணமான ஒரு உணவுப் பொருளாக இருந்தாலும் இந்த முட்டையை சாப்பிடுவது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கக் கூடிய ஒன்று. இந்த முட்டையில் அதிக அளவில் புரதம் நிறைந்து காணப்படுகிறது. குறிப்பாக முட்டையின் வெள்ளைக் கருவில் வைட்டமின் பி அதிகமுள்ளது. கொலஸ்ட்ரால் கிடையாது. எனவே முட்டையின் வெள்ளைக்கருவை பலரும் சாப்பிட விரும்புவார்கள். இந்த முட்டையின் வெள்ளைக்கரு சாப்பிடுவதால் வேறு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது குறித்து இன்று நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.

எலும்புகள்

முட்டையின் வெள்ளைக்கருவில் கால்சியம் அதிகளவில் நிறைந்து காணப்படுவதால் இவை நமது எலும்புகளை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றுகிறது. கால்சியம் பற்றாக்குறை காரணமாக எலும்பு பலவீனமாக இருப்பவர்கள் நிச்சயம் இந்த முட்டையின் வெள்ளைக்கருவை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் எலும்புகளில் ஏற்படக்கூடிய ரிக்கெட்ஸ் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் ஆகிய பிரச்சனைகளை நீக்குவதற்கும் இந்த வெள்ளை கரு உதவுகிறது.

இதயம்

முட்டையின் வெள்ளை கருவை சாப்பிடுவதன் மூலமாக இதயத்தில் ஏற்படும் இரத்த உறைவு நீக்கப்படுகிறது. மேலும் இந்த வெள்ளைக் கருவில் வைட்டமின் மற்றும் தாதுக்கள் அதிக அளவில் நிறைந்து காணப்படுவதால், இதயத்துக்கான ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள பொட்டாசியம் இதயம் தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கவும் உதவுகிறது.

உயர் ரத்த அழுத்தம்

இந்த முட்டையின் வெள்ளைக்கருவை சாப்பிடும் பொழுது அதில் உள்ள பொட்டாசியம் காரணமாக இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் முட்டையின் வெள்ளைக்கருவை அதிகளவில் எடுத்துக் கொள்ளலாம்.

சோர்வு

முட்டையின் வெள்ளை கருவில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது. எனவே உடலில் இரும்புச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படக்கூடிய சோர்வை நீக்குவதற்கும், தலைசுற்றலை மாற்றுவதற்கும் இந்த முட்டை சாப்பிடுவது பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள மாங்கனீசு மற்றும் மெக்னீசியம் காரணமாக உடல் சோர்வை நீக்க இது உதவுகிறது.

தசைகள்

முட்டையின் வெள்ளைக்கருவில் புரதம் அதிகம் காணப்படுகிறது. எனவே இவை தசைகளை வலுவாக்க உதவுவதுடன், தளர்ந்த தசைகள் கெட்டியாக்கவும் உதவுகிறது. எனவே முட்டையின் வெள்ளைக்கருவை அதிக அளவில் சாப்பிடும்பொழுது தசைகள் வலுவடைய உதவுகிறது.

Rebekal

Recent Posts

42-வது ஐபிஎல் போட்டி .. கொல்கத்தா – பஞ்சாப் இன்று பலப்பரீட்சை !

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், பஞ்சாப் அணியும் மோதிகிறது. ஐபிஎல்லின் 17-வது தொடரின் 42-வது போட்டியாக இன்றைய நாளில் கொல்கத்தா நைட்…

6 mins ago

சுட்டெரிக்கும் வெயில்…பொதுமக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்.!

MK Stalin: கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வாட்டி வதைத்து வரும் வெயிலின் தாக்கம் நாளுக்கு…

37 mins ago

இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரி ரத்து செய்யப்பட்டது – பிரதமர் மோடி விமர்சனம்!

PM Modi: இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரியை ராஜிவ் காந்தி ரத்து செய்தார் என பிரதமர் மோடி கூறிஉள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்…

56 mins ago

தான்சானியாவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 155 பேர் பலி.!

East Africa: தான்சானியா நாட்டில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 155 பேர் உயிரிழந்துள்ளனர், 236 பேர் காயம் அடைந்துள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் கனமழையைத்…

2 hours ago

13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்.!

Elections 2024: மக்களவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 2ஆம் கட்டமாக கர்நாடகா, கேரளா,…

2 hours ago

13 மாநிலங்கள்… 89 தொகுதிகள்… இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு.!

Election2024 : மக்களவை 2ஆம் கட்ட தேர்தல் 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தியாவில் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல்…

3 hours ago