IPL 2024 : லக்னோவ் அணியில் கே.எல்.ராகுல் ரெடி ..! ஆனாலும் ஒரு பிரச்சனை !

IPL 2024 : நடைபெற போகும் ஐபிஎல் தொடரில் 4-வது போட்டியாக வருகிற ஞாற்றுகிழமை மதியம் 3.30 மணிக்கு ராஜஸ்தான் அணியும், லக்னோவ் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டியில் லக்னோவ் அணியின் கேப்டன் ஆன கே.எல்.ராகுல் விளையாடுவர் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை NCA மற்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. நடைபெற்ற இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில், ராகுலுக்கு வலது தொடையில் ஏறுப்பட்ட காயம் காரணமாக அந்த தொடரிலிருந்து அவர் அப்போது வெளியேறி இருந்தார்.

Read More :- பாண்டியாவுக்கு இப்படி ஒரு எதிர்ப்பா.? மோசமாக ட்ரெண்டாகும் ‘RIPHARDIKPANDIYA’ !

அதனை தொடர்ந்து, ஐபிஎல் தொடர் நெருங்கும் வேலையில் ரசிகர்கள் அவரது உடல்நலன் குறித்து பிசிசிஐ-யிடம் கேள்வி எழுப்பினார்கள். இந்நிலையில், தற்போது பெங்களுருவில் உள்ள NCA (National Cricket Academy) கே.எல்.ராகுல் காயத்திலிருந்து மீண்டு ஐபிஎல் தொடர் விளையாட தகுதி அடைந்து விட்டார் இருந்தாலும் அவர் முதல் இரண்டு வார போட்டிகளில் விக்கெட் கீப்பிங் செய்யாமல் இருக்கலாம் என்று அறிவுறுத்தி உள்ளனர்.

இதற்கு முன் ராகுல் 90 சதவீதம் சரியாகி விட்டதாகவும் அவர் பிசிசிஐ-யின் மருத்துவ குழுவின் மேற்பார்வையில் நன்றாக முன்னேறி வருவதாகவும் பிசிசிஐ கூறியிருந்தது. அதன் பிறகு இங்கிலாந்தில் உள்ள ஒரு நிபுணரை அணுக முடிவு செய்து ராகுலை இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கபட்டர். தற்போது, அவர் பூரண குணமடைந்து விட்டதாகவும், அவர் ஐபிஎல்-லில் விளையாடலாம் எனவும் NCA அளித்த சான்றிதழ் மூலம் பிசிசிஐ அறிவித்தது.

Read More :- ‘ ரவுண்ட் நெக் ..வைட் T-ஷர்ட் .. ‘ பெங்களூரு வந்தடைந்தார் விராட் கோலி ..!

மேலும், விக்கெட் கீப்பிங் செய்யும் பொழுது அதிக நேரம் குனிந்து விளையாட வேண்டி இருக்கும் என்பதால் அவரை முதலில் விளையாடும் சில போட்டிகளில் மட்டும் விக்கெட் கீப்பிங் செய்ய வேண்டாம் என NCA அறிவித்துள்ளது. இதனால் ஒரு சில போட்டிகளில் மட்டும் அவர் விக்கெட் கீப்பராக விளையாட மாட்டார் என தெரியவந்துள்ளது. இதுதான் லக்னோவ் அணிக்கு முதலில் ஒரு சில போட்டிகளில் சிக்கலாக அமையும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

Leave a Comment