கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை முன்னிலை! 8 பாஜக அமைச்சர்கள் பின்னடைவு!

கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, சிக்காவ்ன் தொகுதியில் முன்னிலை.

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. தற்போது, தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ முடிவுகளின்படி, காங்கிரஸ் 118 இடங்களிலும், பாஜக 73 இடங்களிலும், ஜனதா தளம் 25 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த நிலையில், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, சிக்காவ்ன் தொகுதியில் முன்னிலை பெற்று வருகிறார். அதன்படி, காலை 11:14 மணி நிலவரப்படி, பசவராஜ் பொம்மை (பாஜக) – 21519 வாக்குகள், சித்தராமையா (காங்கிரஸ்) – 5288 வாக்குகள், டி.கே.சிவக்குமார் (காங்கிரஸ்) – 41746 வாக்குகள், எச்.டி.குமாரசாமி (மஜத) – 524 வாக்குகள் முன்னிலை பெற்று வருகின்றனர்.

மேலும், பாஜகவில் இருந்து காங்கிரஸில் இணைந்த ஜெகதீஸ் ஷெட்டர் 11,000 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல், கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 8 பாஜக அமைச்சர்கள்  சந்தித்துள்ளனர். பாஜக அமைச்சர்கள் ஹாலப்பா ஆச்சார், சோமண்ணா, பிசி நாகேஷ், கேசி.நாராயண கவுடா, முருகேஷ் நிராணி, பி.ஸ்ரீராமுலு, சுதாகர் மற்றும் கோவிந்த கார்ஜோள் ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.