சினிமா

கண்மணி அன்போடு காதலன்…ரீ-ரிலீஸ் ஆகும் ‘குணா’ ! எப்போது தெரியுமா?

குணா : காலங்கள் கடந்தும் பேசப்படும் படங்களில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான குணா படமும் இருக்கும் என்றே சொல்லலாம். இயக்குனர் சந்தான பாரதி இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் வெளியான சமயத்தில் கொண்டாடபடவில்லை என்றாலும் கூட இன்றய காலகட்டத்தில் பெரிய அளவில் பேசப்படும் படமாக இருக்கிறது.

இந்த படத்தில் இடம்பெற்ற வசனங்கள் மற்றும் குகை பாடல் ஆகியவையை வைத்து மலையாளத்தில் மஞ்சுமல் பாய்ஸ் என்கிற படமும் எடுக்கப்பட்டு அந்த படம் 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமே குணா குகை மற்றும் படத்தின் கடைசியில் வரும் கண்மணி அன்போடு காதலன் பாடலை வைத்தது தான் என்று கூட கூறலாம்.

இப்படி காலங்கள் கடந்தும் பேசப்படும் படமாக இருக்கும் குணா படத்தை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் ஸ்வாதி சித்ரா இன்டர்நேஷனல் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.  ஸ்வாதி சித்ரா இன்டர்நேஷனல்  நிறுவனத்திடம் இருந்து படத்தின் ரீ -ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள பிரமிட் ஆடியோ குரூப் குணா படத்தினை டிஜிட்டல் வடிவத்தில் மெருகேற்றி ரீ-ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளார்களாம்.

அதன்படி, குணா படத்தினை வரும் ஜூன் 21-ஆம் தேதி உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது. படம் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆக உள்ளதால் கமல்ஹாசன் ரசிகர்கள் உற்சாகத்துடன் படத்தினை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். மேலும், இந்த குணா திரைப்படத்தில் ரேகா , ஜனகராஜ், அஜய் ரத்னம், எஸ்.பி. பாலசுப்ரமணியம், ஷரத் சக்சேனா, கிரிஷ் கர்னாட், பிரதீப் சக்தி, எஸ். வரலட்சுமி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

அவருக்கு பாரத ரத்னா கொடுக்கணும்..! இந்திய அரசுக்கு சுனில் கவாஸ்கர் வேண்டுகோள்!!

சுனில் கவாஸ்கர் : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் அவர் மிட்-டே பக்கத்தில் எழுதிய கட்டுரையில் இந்திய அணியின் பயிற்சியாளருக்கு பாரத் ரத்னா விருது வழங்க…

4 hours ago

இந்த டிகிரி முடிச்சுடீங்களா? அப்போ இந்த அரசாங்க டேட்டா என்ட்ரி வேலை உங்களுக்கு தான்..!

சிவகங்கை : மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் (NHM) கீழ் இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலத்தில் ஆடியோலஜிஸ்ட்/ஸ்பீச் தெரபிஸ்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், ரேடியோகிராபர்,…

4 hours ago

2 நாள் பயணமாக ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி.!

பிரதமர் மோடி : மூன்று நாள் அரசு முறை பயணமாக தனி விமானம் மூலம் பிரதமர் மோடி, இன்று காலை ரஷ்யா புறப்பட்டார். அங்கு, புதின் உள்ளிட்டோரை…

4 hours ago

மிரட்டும் சண்டை…தெறிக்கும் வசனங்கள்…வெளியானது வணங்கான் டிரைலர்!

வணங்கான் : சூர்யா நடித்து வந்து பாதியில் விலகிய 'வணங்கான்'  படம் அப்டியே டிராப் ஆகிவிடும் என செய்திகள் வெளியான நிலையில், இயக்குனர் பாலா நடிகர் அருண்…

5 hours ago

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களம் : ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம்.!

விழுப்புரம்: நாளை மறுநாள் (ஜூலை 10) விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்றது. விழுப்புரம் மாவட்டம்…

5 hours ago

உங்க வீட்ல பல்லி தொல்லை அதிகமா இருக்கா? அப்போ இந்த டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணுங்க..!

Lizard- பல்லியை வீட்டிலிருந்து முழுமையாக விரட்டி அடிக்க கூடிய டிப்ஸ்களை இங்கே காணலாம். நம்மில் பலருக்கும் பாம்பை விட பல்லிக்கு  தான் அதிகம் பயம் இருக்கும். இதனால்…

5 hours ago