ஜல்லிக்கட்டு போட்டிகள்… 12,176 காளைகள், 4,514 மாடுபிடி வீரர்கள் பதிவு – அமைச்சர் மூர்த்தி

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மிகவும் பிரபலமானது. இதனை கண்டு ரசிக்க ஒரு கூட்டமே எதிர்பார்த்து காத்திருக்கிறது.

அதன்படி, இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜனவரி 15ம் தேதியும், பாலமேட்டில் வரும் 16-ஆம் தேதியும் அலங்காநல்லூரில் 17ம் தேதி என ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இதனையடுத்து, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ள ஆன்லைன் மூலம் முன்பதிவு தொடங்கப்பட்டது.

சபரிமலை பக்தர்கள் கூட்டத்தை கேரள அரசு மிகச்சிறப்பாக கையாண்டு வருகிறது.! அமைச்சர் சேகர்பாபு.!

அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், ஆகியவற்றில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க விருப்பம் உள்ள மாடுபிடி வீரர்கள், காளைகள் முன்பதிவு செய்ய madurai.nic.in என்ற இணையதளத்தில் இன்று வரை முன்பதிவு செய்யலாம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் மூர்த்தி, மதுரை அவனியாபுரம், அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 12,176 காளைகள் மற்றும் 4,514 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

இதில், அலங்காநல்லூர் 6,099, பாலமேடு 3,677, அவனியாபுரம் 2,400 காளைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.  இதுபோன்று, அலங்காநல்லுர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 1,318 மாடுபிடி வீரர்களும், பாலமேட்டில் 1,412, அவனியாபுரத்தில் 1,734 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். மேலும், அலங்காநல்லூரில் அரங்கம் திறக்கப்பட்ட பின் 5 நாட்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் எனவும் தெரிவித்தார்.