அடேங்கப்பா இப்படி ஒரு சட்டமா? விசா வேண்டி விண்ணப்பிப்பவர்களுக்கு புதிய சட்டத்தை விதித்த அமெரிக்கா!

இனிமேல் விசா வேண்டி விண்ணப்பிப்பவர்கள், தங்களின் சமூக வலைதள விவரங்களை அளிக்க வேண்டும் என அமெரிக்கா புதிய விதியை விதித்துள்ளது.
அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், விசா கோருபவர்கள், இனிமேல் தங்களின் சமூக வலைதள விபரங்களையும் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
மேலும், குறைந்தது 5 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட இ-மெயில் விவரத்தையும், தொலைபேசி எண்களையும் சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுக்கு ஒரு கோடியே 47 லட்சம் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்த புதிய விதிகளில் இருந்து, தூதரக விசா கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.