ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள்.. பயணசீட்டு கட்டாயம் – சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

கிரிக்கெட் ரசிகர்கள் சென்னை மெட்ரோ இரயிலில் பயணிக்க பயணச்சீட்டுகளை பெற வேண்டும் என நிர்வாகம் அறிவிப்பு.

சென்னையில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் ப்ளே ஆஃப் போட்டிகளை கண்டுகளிக்க வருகை தரும் கிரிக்கெட் ரசிகர்கள் சென்னை மெட்ரோ இரயிலில் பயணிக்க பயணச்சீட்டுகளை பெற வேண்டும் என்று சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பாண்டு  ஐபிஎல் தொடரை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் இணைந்து வழங்கி வந்தது.

அதன்படி, ஐ.பி.எல் போட்டிகளுக்கான பார்கோட் போடப்பட்ட கியூ ஆர் டிக்கெட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ இரயிலில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணித்து வந்தனர். இதனை தொடர்ந்து நடக்க இருக்கும் ஐபிஎல் ப்ளே ஆஃப் சுற்றுகள் முற்றிலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, ஐபிஎல் டிக்கெட்டுகளை மெட்ரோ இரயில் பயணச்சீட்டாக பயன்படுத்த இயலாது சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் மே 23 மற்றும் 24-ம் தேதிகளில் சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகளை கண்டுகளிக்க வருகை தரும் கிரிக்கெட் ரசிகர்கள், மெட்ரோ பயணிகள், மெட்ரோ இரயிலில் பயணிப்பதற்கு வழக்கமான மெட்ரோ இரயில் பயணச்சீட்டுகளை பெற்றுகொள்ளுமாறு சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பயணிகள் மெட்ரோ இரயில் பயணச்சீட்டுகளை வாட்ஸ்அப் (91-8300086000), க்யூஆர் அல்லது சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மொபைல் செயலி மூலம் பெற்றுக்கொள்ளலாம். ஏனெனில் டிக்கெட் கவுன்டர்கள் இரவு 11 மணிக்குப் பிறகு செயல்படாது. மேலும், சென்னையில் போட்டி நடைபெறும் நாட்களில் கிரிக்கெட் ரசிகர்களுக்காக மே 23 மற்றும் 24 ஆகிய இரு தினங்களிலும் இரவு 1 மணி வரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

தொடர்ந்து குறையும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதோ.!

Gold Price: கடந்த வாரம் ரூ.55 ஆயிரத்திற்கும் மேல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.53ஆரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும்…

19 mins ago

பாக்ஸ் ஆபிஸில் மிரட்டியதா அரண்மனை 4? முதல் நாள் வசூல் விவரம் இதோ!

Aranmanai 4 Box Office : அரண்மனை 4 திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகி…

27 mins ago

பிரேசிலை புரட்டிப்போட்ட கனமழை.. 39 பேர் பலி.. 70 பேர் மாயம்.!

Heavy Rain in Brazil:  பிரேசிலில் பெய்து வரும் கனமழையால் 39 பேர் உயிரிழந்துள்ளனர், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இயற்கை எப்போ எப்படி…

33 mins ago

15 வயது சிறுவன் கொலையாளி என தீர்ப்பு ..! சக மாணவரை இதயத்தில் குத்தி கொன்ற கொடூரம் !!

Alfie Lewis : ஆல்ஃபி லூயிஸ் என்ற இளைஞரை கொலை செய்த குற்றத்திற்காக 15 வயது சிறுவன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. லண்டன் மாகாணத்தில் லீட்ஸில் உள்ள ஹார்ஸ்ஃபோர்த்…

39 mins ago

அவதூறு வழக்கு… கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் வாகனம் விபத்தில் சிக்கியது.!

Savukku Sankar : தேனியில் கைதான சவுக்கு சங்கரை கோவை அழைத்து வரும் போது வாகனம் விபத்தில் சிக்கியது. சவுக்கு மீடியா (Savukku Media) எனும் பிரபல…

52 mins ago

ஊழியரை இரும்பு ராடால் தாக்கிய வழக்கில் கேஜிஎஃப் விக்கி கைது.!

KGF Vicky : ஊழியரை இரும்பு ராடால் தாக்கிய வழக்கில் பாஜக இளைஞரணி முன்னாள் நிர்வாகி கேஜிஎஃப் விக்கி கைது செய்யப்பட்டார். சென்னை வண்ணாரப்பேட்டையில் ஆண்களுக்கான ஆடைகள்…

52 mins ago