INDvsNZ ODI SERIES: ரோஹித், கில் சதம்! இந்தியா அதிரடி ரன் குவிப்பு.!

இந்தியா-நியூசிலாந்து இடையே 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அதிரடியாக விளையாடி 385 ரன்கள் குவித்துள்ளது.

நியூசிலாந்து அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில், இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் கில் ஆகியோரின் அதிரடியால் முதல் விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய இருவரும் அடுத்தடுத்து சதமடித்து அசத்தினர். ரோஹித் சர்மா தனது 30 ஆவது சதமடித்த நிலையில் 101 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். கேப்டனை தொடர்ந்து கில்லும் தனது சதத்தை நிறைவு செய்தவுடன் 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து களமிறங்கிய விராட் கோலி(36 ரன்கள்), இஷான் கிஷன்(17 ரன்கள்), சூர்யகுமார் யாதவ்(14 ரன்கள்) என சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து வந்தனர். ஒருபுறம் ஹர்டிக் பாண்டியா( 54* ரன்கள்) நிலைத்து நின்று அரைசதம் கடக்க மறுபுறம் விக்கெட்கள் விழுந்தது. 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி, 9 விக்கெட்கள் இழப்புக்கு 385 ரன்கள் குவித்துள்ளது.

கடைசி நேரத்தில் அதிகபட்சமாக ஹர்டிக் அதிரடியாக விளையாடி 3 போர்கள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 54* ரன்களும், ஷர்துல் தாக்குர் 25 ரன்களும் குவித்தனர். நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி மற்றும் பிளேர் டிக்னர் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். இதனால் நியூசிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Muthu Kumar

Recent Posts

‘செட்டில் ஆகிவிட்டு அடிங்க ..’ ! டி20யின் மாற்றத்தை ஆராயும் ரிக்கி பாண்டிங் !

Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…

2 hours ago

நெல்சனின் முதல் தயாரிப்பு.. வித்தியாசமான லுக்கில் கவின்.! கவனம் ஈர்க்கும் ப்ரோமோ வீடியோ!

Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…

2 hours ago

இந்தியாவை பின்னுக்கு தள்ளிய பேட் கம்மின்ஸ் ! ஐசிசி தரவரிசையில் ஆஸி. கிரிக்கெட் அணி நம்பர் 1 !!

ICC Ranking  : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…

2 hours ago

20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி காங்கிரஸ் தோல்வி.! அமித்ஷா கடும் விமர்சனம்.!

Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…

2 hours ago

வேட்டையன் படப்பிடிப்பில் கோட் சூட்டில் கலக்கும் சூப்பர் ஸ்டார்கள்! வைரல் க்ளிக்ஸ்…

Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…

3 hours ago

விஜய் மகன் இயக்கும் படத்தில் நடிக்கிறீங்களா? கவின் சொன்ன பதில்!!

Kavin : விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் தான் நடிக்கிறேனா இல்லையா என்பதற்க்கு கவின் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து…

3 hours ago