IND vs ENG LIVE CRICKET: ஹேல்ஸ், பட்லர் அதிரடியால் இங்கிலாந்து அணி 12 ஓவர்கள் முடிவில் 123/0, .!

  • 12 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 123ரன்கள் குவிப்பு. ஜோஸ் பட்லர் 6 பௌண்டரிகளுடன் 42 ரன்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் 3 பௌண்டரி, 7 சிக்சருடன் 77 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர். இங்கிலாந்து அணி வெற்றி பெற 48 பந்துகளில் 46ரன்கள் தேவைப்படுகிறது.
  • ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடியுடன் இங்கிலாந்து அணி 9 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 91 ரன்கள் குவிப்பு. ஜோஸ் பட்லர் 6 பௌண்டரிகளுடன் 36 ரன்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் 1 பௌண்டரி, 5 சிக்சருடன் 51 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர்.
  • இங்கிலாந்து அணி பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் குவிப்பு. ஜோஸ் பட்லர் 6 பௌண்டரிகளுடன் 28 ரன்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் 1 பௌண்டரி, 3 சிக்சருடன் 33 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர்.
  • 169 ரன்கள் வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கி விளையாடி வருகிறது. ஆட்டத்தின் முதல் ஓவரில் விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் குவித்துள்ளது. ஜோஸ் பட்லர் 12 ரன்களுடன் விளையாடி வருகிறார்.
  • 20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக ஹர்டிக் பாண்டியா 4 பௌண்டரி மற்றும் 5 சிக்ஸர்களுடன்  63 ரன்களும், கோலி 50 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து சார்பில் கிறிஸ் ஜோர்டன் 3 விக்கெட்களும்  வீழ்த்தியுள்ளனர்.
  • அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த ரோஹித் ஷர்மா 27 ரன்களுக்கு அட்டமிழந்தார்.இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்களை எடுத்துள்ளது.
  • பவர் பிளே முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் குவிப்பு. ரோஹித் 3 பௌண்டரிகளுடன் 20 ரன்களுடனும், கோலி ஒரு சிக்சருடன் 12 ரன்களுடனும் எடுத்து விளையாடி வருகின்றனர்.

  • ஆட்டத்தின் முதல் சிக்சை பறக்க விட்டார், விராட் கோலி. 4 ஆவது ஒவரின் முதல் பந்தில் கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தில் கோலி சிக்ஸ் அடித்தார். 4 ஓவர் முடிவில் இந்தியா 21/1 ரன்கள் குவிப்பு. ரோஹித் 5 ரன்களுடனும், கோலி 10 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
  • 3 ஓவர் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் குவிப்பு, ரோஹித் 4 ரன்களுடனும், கோலி 2 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
  • கிறிஸ் வோக்ஸ் வீசிய இரண்டாவது ஓவரில் 4 ஆவது பந்தில் ராகுல்(5), பட்லரிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.
  • முதல் ஓவர் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் குவிப்பு. ராகுல், பென் ஸ்டோக்ஸ் வீசிய முதல் பந்திலேயே பௌண்டரி அடித்தார்,ரோஹித் 1 ரன்னுடனும், ராகுல் 5 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
  • டாஸ் வென்று இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது, அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கி விளையாடி வருகிறது.

Leave a Comment